உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:தி. வை. சதாசிவப் பண்டாரத்தார் ஆய்வுகள் 3.pdf/263

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




238

1.

தி.வை.சதாசிவப் பண்டாரத்தார் ஆய்வுகள் - 3

நான்மறை தெரிந்து நூன்முறை யுணர்ந்தாங்

கருச்சனா விதியொடு தெரிச்ச வாகமத் தொழில் மூவெண் பெயருடை முப்புரி நூலோர் பிரியாத் தன்மைப் பெருந்திரு வுடையது பாடகச் சீறடிப் பணைமுலைப் பாவையர் நாடகத் துழநி நவின்றது சேடகச்

சண்டையுங் கண்டையுந் தாளமுங்காள)முங் கொண்டதிர் படகமுங் குளிறு மத்தளங்களுங் கரடிகைத் தொகுதியுங் கைமணிப் பகுதியு முருடியல் திமிலை முழக்கம் மருடரு

வால்வளைத் துணையு மேல்வளைத் தணையுங் கருப்பொலி மேகமுங் கடலுமெனக் கஞலி

திருப்பொலி திருப்பலி சினத்து விருப்பொலிப் பத்தர்தம் பாடல் பயின்றது முத்தமிழ் நாவலர் நாற்கவி நவின்றது ஏவலி

லருஷையொ டரஹரவெனக் குனித் தடிமைசெய் பருஷையர் வெஹுவிதம் பயின்றது அருஷைமுக் கண்ணவ னுறைவது கடவுளர் நிறைவது மண்ணவர் தொழுவது வானவர் மகிழ்வது மற்று மின்ன வளங்கொள்மதிற் பதாகைத் தெற்றுங் கொழுநிழற் சிவபுரத்தாற்குப் பன்னாணிலைபெற முன்னா ளுரவோன் செய்த தானம்.

முதல் இராசேந்திர சோழன்

(கங்கைகொண்ட சோழன்)

திருமன்னி வளர விருநில மடந்தையும் போர்ச்சயப் பாவையுஞ் சீர்த்தனிச் செல்வியுந்

தன்பெருந் தேவிய ராகி யின்புற

நெடிதிய லூழியு ளிடைதுறை நாடும்

தொடர்வன வேலிப் படர்வன வாசியும்

சுள்ளிச் சூழ்மதிற் கொள்ளிப் பாக்கையும்

இவ்வேந்தனது மெய்க்கீர்த்தியின் முதல் இரண்டு வரிகள் வீரசோழியம் யாப்புப்படலம்

19 - ஆம் கலித்துறை உரையில் மேற்கோளாக எடுத்துக் காட்டப் பெற்றுள்ளமை அறியத்தக்கது.