உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:தி. வை. சதாசிவப் பண்டாரத்தார் ஆய்வுகள் 3.pdf/268

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




பிற்காலச் சோழர் சரித்திரம் - 1

இரண்டாம் இராசேந்திர சோழன்

திருமாது புவியெனும் பெருமாத ரிவர்தன்

மாதே வியர்க ளாக மீதொளிர்

வெண்குடை யுயர்த்துத் திண்கலி பெயர்த்துத்தன்

சிறிய தாதையாகிய வெறுழ்வலிக்

கங்கை கொண்ட சோழனைப் பொங்கிகல் இருமுடிச் சோழ னென்றும் பெருமுரட் டன்றிருத் தம்பியர் தம்முள் வென்றிகொள் மும்முடிச் சோழனைத் தெம்முனை யடுதிறற் சோழ பாண்டிய னென்றுங் கோழிமன் றொடுகழல் வீரசோழனைப் படிபுகழ் கரிகால சோழ னென்றும் பொருதொழில் வாள்வலித் தடக்கை மதுராந் தகனைச் சோழ கங்க னென்றுந் தோள்வலி மேவிகல் பராந்தக தேவனைச் சோழ வயோத்திய ராச னென்றும்

இருதயத் தன்பொடு கருது காதலருள் இத்த லம்புக ழிராசேந்திர சோழனை உத்தம சோழ னென்றுந் தொத்தணி

முகையவி ழலங்கன் முடிகொண்ட சோழனை

இகல்விச யாலய னென்றும் புகர்முகத்

தேழுயர் களிற்றுச் சோழகே ரளனை

வார்சிலைச் சோழ கேரள னென்றுங்

திண்டிறற் கடாரங் கொண்ட சோழனைத்

தினகரன் குலத்துச் சிறப்பமர் சோழனை

கனக ராச னென்றுங் கனைகடற்

படிகொண்ட பல்புகழ் முடிகொண்ட சோழனைச்

சுந்தர சோழ னென்றுஞ் செந்தமிழ்ப்

பிடிகளிற் றிரட்ட பாடி கொண்ட

சோழனைத் தொல்புலி யாளுடைச் சோழ

கன்னகுச் சியராச னென்றும் பின்னுந்தன்

காதலர் காதலர் தம்முள் மேதகு

கதிராங் கனைகழல் மதுராந் தகனை வெல்படைச் சோழ வல்லப னென்றும்

மானச் சிலைக்கையோ ரானைச்சே வகனை

243