உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:தி. வை. சதாசிவப் பண்டாரத்தார் ஆய்வுகள் 3.pdf/272

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




பிற்காலச் சோழர் சரித்திரம் - 1

தார்சன நாதன் றம்பியைப் போர்க்களத்

தலங்கல்சூழ் பசுந்தலை யரிந்து பொலங்கழல் தென்னவன் ஸ்ரீவல்லவன் மகன் சிறுவன் மின்னவில் மணிமுடி வீரகே சரியை மதவரை யொன்றா லுதைப்பித் துதகையிற் கேரளர் தங்குல செங்கீரை யோடும் வேரறப் பறிந்தோடி மேல்கடல் லீழ வாரண மருகுளி செலுத்தி வாரியி

லெண்ணருங் களிற்றின மிரட்டரைக் கவர்ந்த கண்ணியற் களிற்றொடுங் கட்டிப் பண்ணுப் பிடியொடு மாங்கவர் விடுதிறை தந்த வேழ நிரைகொண்டு சூழி புனல்

கொண்டாற் றுறவிற் குறித்த வெம்போரில் தண்ட நாயகர் தம்மில் திண்டிறல் மல்லியண் ணனையு மஞ்சிப் பய்யனையும் பில்குமதக் களிற்றுப் பிரமதே வனையும் தண்டா ரசோகையன் தன்னையுங் திண்டிறற் சத்தியண் ணனையுஞ் சந்திவிக் கிரகப் பத்தி யண்ணன் றன்னையு மத்தகு தேமரு தெரியல் வீமயன் றன்னையு மாமதி வங்கா ரனையும் நாமவேற்

கங்கனை நுளம்பனைக் காடவர் கோனை வம்புமத யானை வைதும்ப ராயனை யிருந்தலை யரிந்து பெரும்புனற் றனாது கங்கை மாநகர் புகுந்தபின் திங்களின் வழிவரு சளுக்கியிப் பழியொடு வாழ்வதிற் சாவது சால நன்றென் றேவமுற் றுன்னிய சிந்தைய னாகி முன்னம் புதல்வருந் தானு முதுகிட் டுடைந்த கூடலே களமெனக் குறித்துக் கூடலில் வாரா தஞ்சினர் மன்ன ரல்லர் போர்ப்பெரும்பழிப் புரட்ட ராகவென்

றியாவரு மறிய வெழுதிய சபத

மேவரு மோலை விடை யொடுங் கொடுத்தவ்

விரட்ட பாடிப் புரட்டரில் மேதகு

247