உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:தி. வை. சதாசிவப் பண்டாரத்தார் ஆய்வுகள் 3.pdf/278

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




253

சேர்க்கை II

சோழ மன்னர்களைப் பற்றிய பழைய பாடல்கள்

முதல் ஆதித்த சோழன்

1

புலமன் னியமன்னைச் சிங்கள நாடு பொடிபடுத்த குலமன் னியபுகழ்க் கோகன நாதன் குலமுதலோன் நலமன் னியபுகழ்ச் சோழன தென்பர் நகுசுடர்வாள் வலமன் னியஎறி பத்தனுக் கீந்ததோர் வண்புகழே. சிங்கத் துருவனைச் செற்றவன் சிற்றம் பலமுகடு கொங்கிற் கனகம் அணிந்த ஆதித்தன் குலமுதலோன் திங்கட் சடையர் தமரதென் செல்வம் எனப் பறைபோக் கெங்கட் கிறைவன் இருக்குவே ளூர்மன் இடங்கழியே. 2 செம்பொன் அணிந்து சிற்றம்பலத் தைச்சிவ லோகமெய்தி நம்பன் கழற்கீழ் இருந்தோன் குலமுதல் என்பர்நல்ல வம்பு மலர்த்தில்லை ஈசனைச் சூழ மறைவளர்த்தான் நிம்ப நறுந்தொங்கற் கோச்செங்க ணான்எனும் நித்தனையே.

3

1. இப்பாடல்கள் மூன்றும் நம்பியாண்டவர் நம்பி இயற்றியுள்ள திருத்தொண்டர் திருவந்தாதியில் உள்ளவை. (பாக்கள் 50, 65,83) இந்நூல், சைவத் திருமுறைகளுள் ஒன்றாகிய பதினோராந் திருமுறையில் அடங்கிய நாற்பது நூல்களுள் ஒன்றாகும். இதன் ஆசிரியராகிய நம்பியாண்டர் நம்பி என்பார். தம் காலத்துச சோழ மன்னனாகிய முதல் ஆதித்தனை இந்நூலில் மேலே குறித்துள்ள மூன்று பாடல்களிலும் புகழ்ந்து பாராட்டியிருத்தல் அறியத்தக்கது. இப்புலவர் பெருமான் முதல் இராச ராசசோழன் காலத்தில் இருந்தவர் என்பது ஆராய்ச்சியாளர்களின் கருத்து. அக்கொள்கை பொருந்தாது என்பதும் இவர் முதல் ஆதித்தசோழன் காலத்தில்தான் இருந்தவராதல் வேண்டும் என்பதும் நம்பியாண்டவர் நம்பி காலம்' என்ற எண் கட்டுரையில் நன்கு விளக்கப்பட்டுள்ளன. (செந்தமிழ்த் தொகுதி 45, பக்கங்கள் 7-15)