உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:தி. வை. சதாசிவப் பண்டாரத்தார் ஆய்வுகள் 3.pdf/279

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




254

தி.வை. சதாசிவப் பண்டாரத்தார் ஆய்வுகள் - 3 கண்டராதித்த சோழர்

மின்னாருருவ மேல்விளங்க வெண்கொடிமா ளிகைசூழப் பொன்னார்குன்ற மொன்றுவந்து நின்றது போலுமென்னாத் தென்னாவென்று வண்டுபாடுந் தென்றில்லை யம்பலத்துள் என்னாரமுறை யெங்கள்கோவை யென்றுகொ லெய்துவதே. 1

1

ஓவாதமுத்தீ யஞ்சுகேள்வி யாறங்க நான்மறையோ ராவேபடுப்பா ரந்தணாள ராகுதி வேட்டுயர்வார் மூவாயிரவர் தங்களொடு முன்னரங் கேறிநின்ற கோவேயுன்றன் கூத்துக்காணக் கூடுவ தென்றுகொலோ.

2

முத்தீயாளர் நான்மறையர் மூவா யிரவர் நின்னோடு ஒத்தேவாழுந் தன்மையாள ரோதிய நான்மறையைத் தெத்தேயென்று வண்டுபாடுந் தென்றில்லை யம்பலத்துள் அத்தாவுன்ற னாடல்காண வணைவது மென்றுகொலோ.

3

மானைப்புரையு மடமென்னோக்கி மாமலை யாளோடும் ஆனைஞ்சாடுஞ் சென்னிமேலோ ரம்புலி சூடுமரன் தேனைப்பாலைத் தில்லைமல்கு செம்பொனி னம்பலத்துக் கோனைஞானக் கொழுந்துதன்னைக் கூடுவ தென்றுகொலோ. 4

களிவானுலகிற் கங்கைநங்கை காதலனே யருளென்

றொளிமால் முன்னே வரங்கிடக்க வுன்னடியார்க் கருளுந் தெளிவாரமுதே தில்லைமல்கு செம்பொனி னம்பலத்துள்

ஒளிவான்சுடரே யுன்னைநாயே னுறுவது மென்றுகொலோ. 5

பாரோர்முழுதும் வந்திறைஞ்சப் பதஞ்சலிக் காட்டுகந்தான் வாரார்முலையாண் மங்கைபங்கன் மாமறையோர் வணங்கச் சீரான்மல்கு தில்லைச்செம்பொ னம்பலத் தாடுகின்ற காரார்மிடற்றெங் கண்டனாரைக் காண்பது மென்றுகொலோ.

6

1. பத்துப் பாடல்களைப் தன்னகத்துக்கொண்ட இப்பதிகம், கண்டராதித்த சோழர் என்று வழங்கப்பெறும் இவ்வரசர் பெருமானே தில்லையம்பலவாணர் மீது பாடியதாகும். இது சைவத் திருமுறைகளுள் ஒன்றாகிய ஒன்பதாந் திருமுறையில் உள்ளது. அதில் இறுதியிலுள்ள திருப்பல்லாண்டு தவிர ஏனைய பதிகங்கள் எல்லாவற்றையும் திருவிசைப்பா என்று கூறுவது வழக்கம். செந்தமிழ்ப் புலமையிற் சிறந்த இவ்வேந்தர் பெருந்தகை தாம்வழிபடச் சென்ற சிவாலயங்களில் எழுந்தருளியுள்ள இறைவன் மீது வேறு பல பதிகங்களும் பாடியிருத்தல் கூடும். அவை இக்காலத்தல் கிடைத்தில. இவர் இப்பதிகத்தின் இறுதிப் பாடலில் தம் பெயரைக் குறித்திருப்பதோடு எட்டாம்பாடலில் தம் தந்தை முதற் பராதங்க சோழன் தில்லையம்பலத்தைப் பொன் வேய்ந்து சிறப்பித்தமையைப் பாராட்டியிருந்தலுங் காண்க.