உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:தி. வை. சதாசிவப் பண்டாரத்தார் ஆய்வுகள் 3.pdf/280

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




பிற்காலச் சோழர் சரித்திரம் - 1

255

இலையார்கதிர்வே லிலங்கைவேந்த னிருபது தோளுமிற மலைதானெடுத்த மற்றவற்கு வாளொடு நாள்கொடுத்தான் சிலையாற்புரமூன் றெய்தவில்லி செம்பொனி னம்பலத்துக் கலையார் மறிபொற் கையினானைக் காண்பதுமென்றுகொலோ. 7 வெங்கோல் வேந்தன் றென்னனாடு மீழமுங் கொண்டதிறற் செங்கோற் சோழன் கோழிவேந்தன் செம்பியன் பொன்னணிந்த அங்கோல்வளையார் பாடியாடு மணிதில்லை யம்பலத்துள் எங்கோனீச னெம்மிறையை யென்றுகொ லெய்துவதே.

நெடியானோடு நான்முகனும் வானவரு நெருங்கி முடியான் முடிகண் மோதியுக்க முழுமணி யின்றிரளை அடியாரலகி னாற்றிரட்டு மணிதில்லை யம்பலத்துள்

8

கடியார் கொன்றை மாலையானைக் காண்பது மென்றுகொலோ. 9 சீரான்மல்கு தில்லைச்செம்பொ னம்பலத் தாடி தன்னைக் காரார்சோலைக் கோழிவேந்தன் றஞ்சையர் கோன்கலந்த ஆராவின்சொற் கண்டராதித்த னருந்தமிழ் மாலைவல்லார் பேராவுலகிற் பெருமையோடும் பேரின்ப மெய்துவரே.

இரண்டாம் பராந்தகனாகிய சுந்தர சோழன் (அம்போதரங்க வொத்தாழிசைக் கலிப்பா)

10

தரவு

மண்வாழும் பல்லுயிரும் வான்வாழு மிமையவரும்

கண்வாழு மாநகர் கிளையனைத்துங் களிகூர

அந்தரதுந் துபியியங்க வமரர்க ணடமாட்

இந்திரர்பூ மழைபொழிய விமையவர்சா மரையிரட்ட

முத்தநெடுங் குடைநிழற்கீழ் மூரியர சரியணைமேல்

மெய்த்தவர்கள் போற்றிசைப்ப வீற்றிருந்த வொரு பெரியோய்!

தாழிசை

எறும்புகடை யயன்முதலா வெண்ணிறந்த வென்றுரைக்கப்

பிறந்திறந்த யோனிதொறும் பிரியாது சூழ்போகி

எவ்வுடம்பி லெவ்வுயிர்க்கும் யாதொன்றா லிடரெய்தின்

அவ்வுடம்பி னுயிர்க்குயிரா யருள்பொழியுந் திருவுள்ளம்;