உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:தி. வை. சதாசிவப் பண்டாரத்தார் ஆய்வுகள் 3.pdf/281

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




256

தி.வை.சதாசிவப் பண்டாரத்தார் ஆய்வுகள் -3

அறங்கூறு முலகனைத்துங் குளிர்வளர்க்கு மழைமுழக்கின் திறங்கூற வரைகதிருஞ் செழுங்கமல் நனிநாண

ஒருமைக்க ணீரொன்பா னுரைவிரிம்ப வுணர்பொருளால் அருமைக்கண் மலைவின்றி யடைந்ததுநின் றிருவார்த்தை;

இருட்பார வினைநீக்கி யெவ்வுயிர்க்குங் காவலென அருட்பாரந் தனிசுமந்த வன்றுமுத லின்றளவும் மதுவொன்று மலரடிக்கீழ் வந்தடைந்தோர் யாவர்க்கும் பொதுவன்றி நினக்குரித்தோ புண்ணியநின் றிருமேனி; அம்போதரங்கம் பேரெண்

ஆருயிர்க ளனைத்தினையுங் காப்பதற்கே யருள்பூண்டாய் ஓருயிர்க்கே யுடம்பளித்தா லொப்புரவிங் கென்னாகும்;

தாமநறுங் குழன்மழைக்கட் டளிரியலார் தம்முன்னர்க் காமனையே முனந்தொலைத்தாற் கண்ணோட்டம் யாதாங்கொல்;

1. இது வீரசோழியம் யாப்புப் படலத்திலுள்ள 11-ஆம் கலித்துறையின் உரையில், உரையாசிரியராகிய பெருந்தேவனார் மேற்கோளாக எடுத்துக்காட்டியுள்ள பாடலாகும்.

சிற்றெண்

போரரக்க ரோரைவர்க் கறவமிழ்தம் பொழிந்தனையே;

ஆரமிழ்த மணிநாகர் குலமுய்ய வருளினையே;

வார்சிறைப்புள் ளரையற்கும் வாய்மைநெறி பகர்ந்தனையே, பார்மிசை யீரைந்தும் பாவின்றிப் பயிற்றினையே'

மூச்சீர் இடையெண்

அருளாழி நயந்தோய் நீஇ;

அறவாழி பயந்தோய் நீஇ;

மருளாழி துரந்தோய் நீஇ;

மறையாழி புரந்தோய் நீஇ;

மாதவரின் மாதவ னீஇ;

வானவருள் வானவ னீஇ;

போதனரிற் போதன னீஇ;

புண்ணியருட் புண்ணிய னீஇ;