உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:தி. வை. சதாசிவப் பண்டாரத்தார் ஆய்வுகள் 3.pdf/28

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




3

1. சோழரின் தொன்மை

வடவேங்கடம்

தென்குமரிக்கு

இடையிலுள்ள நிலப்பரப்பு முற்காலத்தே தமிழகம்' என்று வழங்கப்பெற்றது. இப்போது இதனைத் தமிழ்நாடு என்றே யாவரும் கூறிவரு கின்றனர். இதனைக் குடபுலம், குணபுலம், தென்புலம் என்ற மூன்று பகுதிகளாகப் பிரித்துப் பண்டைக்கால முதல் ஆட்சி புரிந்து வந்தோர், சேர, சோழ, பாண்டியர் என்னும் தமிழ் மூவேந்தரேயாவர். இவர்கள் ஆட்சி புரிந்த பகுதிகள் முறையே சேர மண்டலம், சோழ மண்டலம், பாண்டி மண்டலம் எனப்படும். இவர்கள் ஆசிரியர் தொல்காப்பியனார் காலத்திற்கு முன்னரே இத்தமிழ் நாட்டில் அரசாண்டு வந்தனர் என்பது, 'வண்புகழ் மூவர் தண்பொழில் வரைப்பு* எனவும், 'போந்தை வேம்பே ஆரென வரூஉம் - மாபெருந் தானையர்" எனவும் போதரும் தொல்காப்பியச் சூத்திரங்களால் நன்கு பெறப்படு கின்றது. இம் மூவேந்தருள் இடையிலுள்ள சோழரின் வரலாறே ஈண்டு ஆராயப்பெறுவது.

இனி சோழர் என்பார் நம் தமிழகத்தின் கீழ்ப்பகுதியாகிய சோழ மண்டலத்தைத் தொன்றுதொட்டு ஆட்சிபுரிந்து வந்த அரச மரபினர் ஆவர். இவர்கள் எக்காலத்து இதனை ஆட்சி புரியும் உரிமை எய்தினரென்றாதல், எவ்வேந்தரால் இதன் ஆட்சி முதலில் கைக்கொள்ளப்பட்டதென்றாதல் அறிந்து கொள்ளக்கூட வில்லை. எனவே, எவரும் ஆராய்ந்து அளந்து காண்டற்கரிய அத்துணைத் தொன்மையுற்ற குடியினர் இன்னோர் என்பது நன்கு தெளியப்படும். ஆகவே, இவர்கள்

சிலப்பதிகாரம், அரங். வரி. 37.

1. ‘இமிழ்கடல் வரைப்பில் தமிழகம்' - 2. சிறுபாணாற்றுப்படை - வரிகள் 47,63,79. 3. தொல். பொருள் செய்யுளியல், சூ. 79.

4. தொல். பொருள், புறத்திணையியல், 5.