உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:தி. வை. சதாசிவப் பண்டாரத்தார் ஆய்வுகள் 3.pdf/283

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




258

தி.வை. சதாசிவப் பண்டாரத்தார் ஆய்வுகள் - 3

முதல் இராசராச சோழன்

அருமொழிதன் கோயிலடலரசர் மிண்டித்

திருமகு டக்கொடிக டேய்த்த - பருமணிகள்

ஓதத் தமுதனைய வொண்ணுதலார் மென்மலராம் பாதத்தி னூன்றும் பரல்.

2எனவே தனமென் றிராசேந்திர சிங்கனோ டின்றணைந்த கனவே யுடையன் கனிப்புக்கண் டாற்கட லேழுமமைந் தனவே யெனவவன் றானுதித் தன்றே தொடங்கியென்று நனவே புணர்திரு வின்களிக் கேதுகொ னல்லனவே.

இரண்டாம் இராசேந்திர சோழன்

தற்றுற் றன்றுவெம் போர் செய்த

விற்கைப் பன்மன்முன் போடவோர்

தத்திற் றுன்றுவன் பாய்பரி

யுய்த்துத் தன்மெய்கொண் டோடிய

வெற்றிச் செம்பியன் பார்புகழ்

கொற்கைக் கண்டன்வன் பாரதம்

வெற்புக் கொண்டுதிண் போர்புரி

கொப்பத் தன்றெதிர்ந் தோர்பெறு

கொற்றத் தொங்கல் சிங் காதன

மொற்றைச் சங்குவெண் சாமரை

குத்துப் பந்தர்முன் பாவிய

முத்துப் பந்திமுன் றான்மகிழ்

1

2

1. வீரசோ, அலங். 12 மேற்கோள், அருண்மொழி வர்மன் என்பது முதல் இராசராச சோழனது இயற்பெயராகும். அப்பெயர் அருமொழி எனவும் வழங்கப்பெற்றுள்ளது. இவ்வேந்தன் தன் பெயர்களால் வழங்குமாறு சோழ மண்டலத்தில் அமைத்த ஒன்பது வளநாடுகளுள் அருமொழி தேவவளநாடும் ஒன்று என்பது உணரத்தக்கது.

2. வீரசோ. யாப்பு 22 மேற்கோள்; முதல் இராசராசன் காலத்தில் ஏற்பட்ட வளநாடுகளுள் இராசேந்திர சிங்கவள நாடும் ஒன்றாயிருத்தலால் இவனுக்கு இராசேந்திரசிங்கன் என்ற பெயரும் இருந்தது என்பது தெள்ளிது.

3. வீரசோ. யாப்பு 34 மேற்கோள்; இப்பாடலில் குறிப்பிடப் பெற்ற கொப்பத்துப் போரில் மேலைச் சளுக்கியரை வென்று வாகை சூடியவன் இரண்டாம் இராசேந்திர சோழனே என்பது கலிங்கத்துப்பரணியாலும் கல்வெட்டுக்களாலும் ஒட்டக்கூத்தர் இயற்றிய இரண்டு உலாக்களாலும் உறுதியாதல் உணர்க. இச்சரித்திர நூலிலும் இராசாதிராசன் ஆட்சியில் இப்போர் நிகழ்ச்சி நன்கு விளக்கப்பட்டுள்ளது.