உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:தி. வை. சதாசிவப் பண்டாரத்தார் ஆய்வுகள் 3.pdf/58

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




33

5. முதற் பராந்தக சோழன்

கி.பி.

கி. பி. 907 - 953

-

ஆதித்த சோழன் கி. பி. 907 ல் இறந்தவுடன் அவன் புதல்வனாகிய முதற் பராந்தக சோழன் தஞ்சை மாநகரில் சோழ இராச்சியத்திற்குச் சக்கரவர்த்தியாக முடிசூட்டப் பெற்றான். சோழ மன்னர்கள் மாறி மாறிப் புனைந்து கொண்ட இரு பட்டங்களுள் இவ்வேந்தன் பரகேசரி என்ற பட்டமுடையவன் ஆவன்.

ரு

கி. பி. 907 - ல் இவன் சோழ இராச்சியத்தின் ஆட்சியை ஏற்றுக்கொண்ட காலத்தில் வடக்கேயுள்ள திருக்காளத்தி வரையில் தொண்டை மண்டலம் இவன் ஆட்சிக்குட்பட்டிருந்தது. அன்றியும், கொங்கு மண்டலமும் இவன் ஆளுகைக் குட்பட்டிருந்தது என்பது அங்குக் காணப்படும் இவன் கல்வெட்டுக்களால் அறியக் கிடக்கின்றது. எனவே, தன் தந்தையால் இத்தகைய உயர்நிலைக்குக் கொண்டுவரப்பட்டுத் தனக்கு உரிமையிற் கிடைத்த சோழ இராச்சியத்தை எடுப்பும் இணையுமற்ற சீரிய நிலைக்குக் கொணர வேண்டும் என்பது இவனது பெருவிருப்பம். அதனை நிறைவேற்றுவதற்கேற்றவாறு இவன் பெரிய வீரனாகவும் இருந்தான். அன்றியும், இவனது ஆட்சி நாற்பத்தாறு ஆண்டுகள் நடைபெற்றமை அதற்குற்ற துணையாகவும் அமைந்தது.' இவனது நீடிய ஆட்சியில் எத்துணையோ பல நிகழ்ச்சிகள் நிகழ்ந்திருத்தல் வேண்டும். எனினும், இவன் காலத்துக் கல்வெட்டுக்களின் துணை கொண்டு அறியக்கிடப்பன மிகச் சிலவேயாம். இவனது ஆட்சியின் மூன்றாம் ஆண்டுக் கல்வெட்டுக்கள்' இவனை ‘மதுரைகொண்ட

1. Mysore Gazetter, Vol. II, part II, page 917.

2.S.I.I Vol. V, No. 570.

3. Ins. II of 1931; Ins. 157 of 1928.