உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:தி. வை. சதாசிவப் பண்டாரத்தார் ஆய்வுகள் 4.pdf/100

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




பிற்காலச் சோழர் சரித்திரம் - 2

83

என்பது திருமழபாடியிலுள்ள ஒரு கல்வெட்டால்' தெரிகின்றது. அக் கல்வெட்டால், இவன் பூபால சுந்தரன் என்னும் பெயரினன் என்பதும் இவனுடைய மனைவி இராசேந்திர சோழியார் என்னும் பெயருடையவள் என்பதும் புலப்படுகின்றன.

(4) மறையோன் கண்ணன்

இவன் விக்கிரம சோழனுடைய அமைச்சர்களுள் ஒருவன். மறையவர் குலத்தினன், கண்ணன் என்னும் பெயரினன்; பெரும்புரிசை சூழ்ந்த கஞ்சை என்னும் ஊரினன். கஞ்சை என்பது கஞ்சனூர், கஞ்சாறு என்ற பெயர்களின் மரூஉவாதல் வேண்டும். இவ்விரண்டு ஊர்களிலும் சோழ மன்னர்களுடைய அரசியல் அதிகாரிகளுள் சிலர் முற்காலத்தில் இருந்தனர் என்பது கல்வெட்டுக்களால் புலப்படுகின்றது. இவற்றுள், இவ்வமைச்சன் எவ்வூரினன் என்பது தெரியவில்லை. வெளி வந்துள்ள கல்வெட்டுக்களும் வனைப் பற்றி ஒன்றும் உணர்த்தவில்லை.

(5) வாணன்

இவன் விக்கிரம சோழனது ஆட்சியின் முற்பகுதியில் விளங்கிய ஒரு படைத் தலைவன்; முடிகொண்டானென்ற பெயருடையவன்; வாணர் மரபினன்; வாணகப்பாடி நாட்டினன்; சண்பை என்னும் ஊரினன்; விருத்தராச பயங்கர வாணகோ வரையன் என்னும் பட்டம் எய்தியவன்; கி.பி. 1124ஆம் ஆண்டில் இவ்வாணகோ வரையன், கண்டராதித்த சதுர்வேதி மங்கலத்திற்கு அண்மையிலுள்ள வாணவிச்சாதர நல்லூர் முடிகொண்ட சோழேச்சுரமுடைய மகாதேவர்க்கு நாள் வழி பாட்டிற்கு நிவந்தமாக மூன்றேகால் வேலி இறையிலி நிலம் அளித்துள்ளனன் என்று கீழைப் பழுவூரிலுள்ள கல்வெட் டொன்று' கூறுகின்றது.

(6) காலிங்கர் கோன்

வன் முதற் குலோத்துங்க சோழன் ஆட்சியின் பிற்பகுதியிலும் விக்கிரம சோழன் ஆட்சியின் முற்பகுதியிலும்

1. S.I.I., Vol. V. No. 640.

2.S.I.I.,Vol. V, No. 673.