உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:தி. வை. சதாசிவப் பண்டாரத்தார் ஆய்வுகள் 4.pdf/99

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




82

தி.வை.சதாசிவப் பண்டாரத்தார் ஆய்வுகள் -4

அவ்வாறு சிறப்பிக்கப்பெற்றோர், முன்னம் கலிங்கம் வென்ற கருணாகரத் தொண்டைமான், முனையர்கோன், சோழகோன், மறையோன், கண்ணன், வாணன், கலிங்கர் கோன், செஞ்சியர் கோன் காடவன், வேணாடர் வேந்து, அனந்தபாலன், வத்தவன், சேதித் திருநாடர் சேவகன், காரானை காவலன், அதிகன், வல்லவன், திரிகர்த்தனன் என்போர். விக்கிரம சோழன் காலத்துக் கல்வெட்டுக்களின் துணைக்கொண்டு அவர்களைப் பற்றிய செய்திகளை ஆராய்தல் அமைவுடையதேயாம்.

(1) கருணாகரத் தொண்டைமான்

இவனைப் பற்றிய செய்திகள் முன் அதிகாரத்தில் எழுதப் பட்டுள்ளன. விக்கிரம சோழன் ஆட்சியிலும் இவன் உயிர் வாழ்ந்தானென்பது விக்கிரம சோழனுலாவினால் நன்கறியக் கிடக்கின்றது. ஆனால் இவ்வேந்தன் ஆட்சியில் இவன் அரசாங்க அலுவல்களினின்றும் நீங்கி ஓய்வு பெற்ற நிலையில் இருந்திருத்தல் வேண்டுமென்பது உய்த்துணரப்படுகின்றது. (2) முனையர்கோன்

இவன் விக்கிரம சோழனுடைய அமைச்சர்களுள் ஒருவன் என்பது விக்கிரம சோழனுலாவினால் அறியப்படுகிறது. ஆனால் இதுகாறும் வெளிவந்துள்ள கல்வெட்டுக்களில் இவனைப் பற்றிய செய்தி காணப்படவில்லை. இவன், முனையதரையன், முனையரையன் என்ற பட்டங்களுள் ஒன்றை அரசன்பாற் பெற்றவன் என்று தெரிகிறது.

(3) சோழ கோன்

இவன் விக்கிரம சோழனுடைய படைத் தலைவர்களுள் ஒருவன்; அரசனால் அளிக்கப்பெற்ற சோழ கோன் என்னும் பட்டம் பெற்றவன். இவன், கங்கர், மகாராட்டியர், கலிங்கர், கொங்கர், குடகர் ஆகியோரைப் போரில் வென்று வாகை சூடியவ னென்பது விக்கிரம சோழனுலாவினால் அறியப்படு கின்றது.1 இவன் முதற் குலோத்துங்க சோழன் ஆட்சியின் பிற்பகுதியில் அரசியல் அதிகாரிகளுள் ஒருவனாக நிலவியவன் 1. விக்கிரம சோழ னுலா, வரிகள் 143-46.