உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:தி. வை. சதாசிவப் பண்டாரத்தார் ஆய்வுகள் 4.pdf/98

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




பிற்காலச் சோழர் சரித்திரம் - 2

81

இவர்களுள், முக்கோக் கிழானடியே பட்டத்தரசியாக விளங்கியவள். அவ்வரசி கி. பி. 1127ல் இறந்த பின்னர், தியாகபதாகை என்பாள் பட்டத்தரசியாயினள். விக்கிரம சோழனுக்குப் பிறகு பட்டம் பெற்ற இரண்டாங் குலோத்துங்க சோழன் இவனுடைய தவப் புதல்வன் ஆவன். அவ்வரச குமாரன், விக்கிரம சோழனுடைய மனைவிமாருள் யாருடைய மகனென்பது புலப்படவில்லை.

.

இனி, இவ்வரசனது ஆட்சியின் 17ஆம் ஆண்டுக்கல்வெட்டுக்கள் சிலஊர்களில்காணப்படுவதாலும்18ஆம்ஆண்டுக் கல்வெட்டொன்றும் யாண்டும் காணப்படாமையாலும் இவன் கி. பி. 1135ஆம் ஆண்டின் இறுதியில் இறைவன் திருவடியை எய்தியிருத்தல் வேண்டுமென்பது திண்ணம். அதற்கு இரண்டு ஆண்டுகட்கு முன் கி.பி. 1133-ல் இவன் தன் புதல்வன் இரண்டாங் குலோத்துங்க சோழனுக்கு இளவரசுப் பட்டம் கட்டி அரசியலில் கலந்துகொள்ளுமாறு செய்திருந்தமை குறிப்பிடத்தக்கதாகும். விக்கிரம சோழன் காலத்து அரசியல் தலைவர்களும் சிற்றரசரும்

3

இவ் வேந்தனது ஆட்சிக் காலத்திலிருந்த அரசியல் அதிகாரிகள் பலர் ஆவர். அவர்களுள் சிலருடைய பெயர்கள் வன் கல்வெட்டுக்களில் காணப்படுகின்றன. அன்றியும், கவிஞர் பெருமானாகிய ஒட்டக்கூத்தர், இம்மன்னன் அரசியல் அதிகாரிகளும் சிற்றரசர்களும் மண்டலிகரும் இருமருங்குஞ் சூழ்ந்துவர உலாவப் போந்தானென்று தம் விக்கிரம சோழ னுலாவில் கூறுமிடத்து, இவன் காலத்துத் தலைவர்களுள் சிலர் பெயர்களை நிரல்பட வைத்து அன்னோரின் வீரச் செயல் களையும் பெருமைகளையும் மிகப் பாராட்டிச் செல்கின்றனர்.5

1. கோமன்னன் புவனதரன் விக்கிரம சோழன்

குலமதலை குலோத்துங்க சோழனைக்காத் தளிக்க

(குலோத்துங்கன் பிள்ளைத்தமிழ், காப்பு. 1)

2. Ins. 165 of 1906; Ins. 163 of 1897. (S.I.I., Vol. VI, No. 123.)

3. Ep. Ind., Vol. X, p.No. 138. Ibid. Vol. XI, p. 287.

4. விக்கிரம சோழ னுலா, வரிகள் 136 - 180.

5. இதன் விரிவினைத் தமிழ்ப்பொழில் 14-ஆம் துணரில் யான் எழுதிய 'கூத்தராற் குறிக்கப்பெற்ற சில தலைவர்கள்’ (ப.300 - 312) என்ற கட்டுரையில் காணலாம்.