உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:தி. வை. சதாசிவப் பண்டாரத்தார் ஆய்வுகள் 4.pdf/97

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




80

தி.வை.சதாசிவப் பண்டாரத்தார் ஆய்வுகள் - 4

விக்கிரமனது சிறப்புப் பெயர்கள்

இவ்வேந்தற்கு அக்காலத்தில் வழங்கிய சிறப்புப் பெயர்களுள் பெரும்பாலன இவன் முன்னோர்க்கு வழங்கியனவேயாம். எனினும், இவனுக்கே உரியனவாய் வழங்கிய இரண்டு சிறப்புப் பெயர்கள் கல்வெட்டுக்களிலும் விக்கிரம சோழனுலாவிலும் காணப்படுகின்றன. அவை, தியாகசமுத்திரம், அகளங்கன் என்பனவாம். இம்மன்னன் தன் ஆட்சியின் ஏழாம் ஆண்டில் திருவிடை மருதூர்க்குச் சென்றிருந்த போது, அந்நகரைச் சார்ந்த வண்ணக்குடி என்ற ஊரினைத் தியாகசமுத்திர சதுர்வேதி மங்கலம் என்று பெயர் மாற்றித் திருவிடைமருதூர்க் கோயிலுக்கு இறையிலி தேவதானமாக அளித்தனன் என்று அவ்வூர்க் கல்வெட் டொன்று கூறுகின்றது. திருக்கோடிகா சிவாலயத்திலுள்ள சண்டேசுவர நாயனாரது கோயில் அந்நாளில் தியாகசமுத்திரம் என்னும் பெயருடையதாயிருந்தது என்று தெரிகிறது. அகளங்கன் எனவும், அகளங்கபுரம் எனவும் சில ஊர்கள் இவன் பெயரால் வழங்கப்பெற்று வருதல் அறியத்தக்கது.

விக்கிரம சோழனுடைய மனைவியரும் மக்களும்

5

இவ்வரசர்க்கு மூன்று மனைவியர் இருந்தனர் என்பது கல்வெட்டுக்களால் புலப்படுகின்றது. அன்னோர், முக்கோக் கிழானடிகள், தியாகபதாகை, நேரியன் மாதேவி" என்போர்.

1. Ep. Ind., Vol. VI, No. 21A.

2. Ep. Ind., Vol. VI, No. 21B; Ibid, Vol. IV, pp. 228 and 241.

(b) ஏனைக் கலிங்கங்கள் ஏழினையும் போய்க்கொண்ட

தானைத் தியாக சமுத்திரமே

-(விக்கிரம சோழ னுலா, வரிகள் 661-662)

எங்கோ னகளங்கன் ஏழுலகுங் காக்கின்ற செங்கோல் கொடுங்கோல் சிலர்க்கென்றாள் - (மேற்படி வரிகள் 567 - 568) அகளங்கன் என்னுஞ் சிறப்புப் பெயர் சயங்கொண்டாரது கலிங்கத்துப் பரணியில் காணப்படினும், அது குலோத்துங்கனுக்கு வழங்கியதன்று. அது விக்கிரம சோழனுக்கே வழங்கிய சிறப்புப் பெயரென்பது கல்வெட்டுக்களால் நன்கு வெளியாகின்றது. கல்வெட்டுக் களில் குலோத்துங்கனுக்கு அப்பெயர் காணப்படவில்லை. ஒட்டக்கூத்தர், தன் விக்கிரம சோழனுலாவில் ஏழிடங்களில் விக்கிரமனை அகளங்கன் என்று கூறியிருப்பதும் அப்பெயர் இவனுக்கே சிறப்பாக வழங்கியது என்பதை வலியுறுத்துவதாகும்.

3. Ins. No. 272 and 273 of 1907.

4. Ins. 49 of 1931.

5.S.I.I.,Vol. V. No. 456.

6. Ibid No. 700.