உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:தி. வை. சதாசிவப் பண்டாரத்தார் ஆய்வுகள் 4.pdf/108

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




91

18. இரண்டாங் குலோத்துங்க சோழன் (கி. பி. 1133 - 1150)

-4

விக்கிரம சோழன் கி. பி. 1135-ஆம் ஆண்டில் இறந்த பிறகு,முன்னர் இளவரசுப் பட்டம் கட்டப்பெற்றிருந்த அவன் புதல்வன் இரண்டாங் குலோத்துங்க சோழன் சக்கரவர்த்தியாக முடி சூட்டப்பெற்றனன். இவன் சோழ மன்னர்களின் ஒழுகலாற்றின்படி இராசகேசரி என்னும் பட்டம் புனைந்து அரசாண்டான். இவன் மெய்க்கீர்த்திகள், ‘பூமன்னு பாவை2 எனவும், ‘பூமன்னுபதுமம்* எனவும், 'பூமன்னுயாணர் எனவும், 'பூமருவிய புவியேழும்" எனவும், 'பூமேவிவளர்" எனவும், ‘பூமேவு திருமகள்" எனவும் தொடங்கித் தமிழ் மணங் கமழும் சிறப்புடையனவாய் உள்ளன. அவையெல்லாம் இவ் வேந்தனது ஆட்சியைப் புகழ்ந்து கூறுகின்றனவேயன்றி வரலாற்றுச் செய்தி களை உணர்த்துவனவாயில்லை. எனவே, இவன் ஆட்சிக் காலத்தில் வரலாற்றில் குறிப்பிடத்தக்க அரிய நிகழ்ச்சிகள் எவையும் நிகழவில்லை என்பது தேற்றம்.

இனி, திருமாணிகுழியில் காணப்படும் கல்வெட் டொன்று தில்லைத் திருநகர் சிறப்புடைத்தாகத் திருமுடிசூடிய ஸ்ரீ குலோத்துங்க சோழ தேவர் என்று கூறுகின்றது. இதனைக் கூர்ந்து நோக்குங்கால், தில்லைநகர் நம் குலோத்துங்கன் ஆட்சிக்

1. இவனது ஆட்சி யாண்டு இவன் இளவரசுப் பட்டம் பெற்ற ஆண்டாகிய கி. பி. 1133 முதல் கணக்கிடப்பட்டு வருதல் உணரற்பாலதாம்.

2. S. I. I., Vol. IV, No. 818.

3. Ibid, Vol. V. No. 705.

4. Ibid, No. 643.

5. Ibid, No. 645.

6. Ibid, Vol. VIII, Nos. 319,320 and 749.

7. Ins. 572 of 1907.

8. S. I. I., Vol. VII, No. 780.