உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:தி. வை. சதாசிவப் பண்டாரத்தார் ஆய்வுகள் 4.pdf/107

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




90

தி.வை.சதாசிவப் பண்டாரத்தார் ஆய்வுகள் -4

1

ஊர்களில் காணப்படுகின்றன. அவற்றால் இவன் விக்கிரம சோழனுக்குக் கீழ்ப்பட்டிருந்த ஒரு சிற்றரசன் என்று தெரிகிறது. இவன் பெற்றுள்ள விக்கிரம சோழ கருப்பாறுடையான் என்னும் பட்டமும் இவ்வுண்மையை வலியுறுத்துதல் காண்க.

(6) இராசேந்திர சோழ காங்கேயராயன்

இவன் வெலநாண்டுச் சோழன் ஆவன்; இவனும் இவன் புதல்வன் இரண்டாங் கொங்கனும் விக்கிரம சோழனுக்குக் கீழ்ப்பட்ட சிற்றரசர்கள் என்பது திருக்காளத்திக் கல்வெட்டுக் களால்' அறியப்படுகின்றது.

1. Ins. 155 of 1922; S.I.I., Vol. VIII, No. 511.

2. Ins. 103 of 1922; Ins. 112 of 1922.