உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:தி. வை. சதாசிவப் பண்டாரத்தார் ஆய்வுகள் 4.pdf/106

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




பிற்காலச் சோழர் சரித்திரம் - 2

89

நந்தலூரிலுள்ள ஒரு கல்வெட்டால்' புலப்படுகின்றது. பொத்தப்பி நாடு யாண்டுடையது என்பது முன்னர் விளக்கப்பட்டுள்ளது.

(2) மகா மண்டலேசுவரன் விமலாதித்தன் ஆகிய மதுராந்தகப் பொத்தப்பிச் சோழன்

இவன், பெத்தராசனுக்குப் பிறகு பொத்தப்பி நாட்டில் அரசாண்ட ஒரு குறுநில மன்னன்; விமலாதித்தன் என்னும் பெயருடையவன்; அரசனால் வழங்கப் பெற்ற மதுராந்தக பொத்தப்பிச் சோழன் என்னும் பட்டமுடையவன். இவன் கல்வெட்டுக்கள்’ நந்தலூர், திருக்காளத்தி ஆகிய ஊர்களில் உள்ளன. அவற்றால், இவன் விக்கிரம சோழனுக்குத் திறை செலுத்திக்கொண்டிருந்த ஒரு சிற்றரசன் என்பது வெளியா

கின்றது.

(3) கன்னர தேவனாகிய இராசேந்திர சோழப் பொத்தப்பிச் சோழன்

ஒரு

இவன், விக்கிரம சோழன் காலத்திலிருந்த பொத்தப்பிச் சோழருள் ஒருவன் என்பது திருக்காளத்தியிலுள்ள கல்வெட்டால் புலனாகின்றது. இவன் கன்னர தேவன் என்னும் பெயரினன்; காமராசன் என்பவனுடைய புதல்வன்; இராசேந்திர சோழப் பொத்தப்பிச் சோழன் என்ற பட்டம் உடையவன்.

(4) மகா மண்டலேசுவரன் நம்பயன்

இவன் விக்கிரம சோழனுக்குக் கப்பஞ் செலுத்திக் கொண்டு வேங்கி நாட்டில் அரசாண்ட ஒரு குறுநில மன்னனாவன். இவனைப் பற்றிய செய்தி முன்னர்க் கூறப்பட்டுள்ளது.

(5) மகா மண்டலேசுவரன் கட்டிதேவ மகாராசனாகிய விக்கிரம சோழ கருப்பாறுடையான்

இவன் புடோலியரையன் என்றும் வழங்கப்பெற்றுள்ள னன். புடோலி என்பது கடப்பை ஜில்லாவிலுள்ள ஓர் ஊராகும். இவன் கல்வெட்டுக்கள், திருக்காளத்தி, குடிமல்லம் என்னும்

1. Ins. 583 of 1907.

2. Ins. Nos. 579 of 1907 and 100 of 1922.

3. Ins. 102 of 1922.