உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:தி. வை. சதாசிவப் பண்டாரத்தார் ஆய்வுகள் 4.pdf/105

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




88

தி.வை.சதாசிவப் பண்டாரத்தார் ஆய்வுகள் - 4

அதிகாரியாவன். இவன் அவ்வூர்க் கோயிலில் யாத்திரிகர்க்கு உணவளிக்கும் பொருட்டுப் பொருள் அளித்துள்ளான் என்பது அங்குள்ள கல்வெட்டொன்றால்' புலனாகின்றது.

(5) அம்மையப்பன் இராசேந்திர சோழ சம்புவராயன்

இவன் வடஆர்க்காடு ஜில்லாவிலிருந்த ஒரு தலைவன்; பல்லவர் மரபில் செங்கேணிக்குடியில் தோன்றியவன்; அம்மையப்பன் என்ற பெயருடையவன்; இராசேந்திர சோழ சம்புவராயன் என்னும் பட்டம் பெற்றவன். இவன் வடஆர்க்காடு ஜில்லாவிலுள்ள சீயமங்கலத் திறைவற்கு அர்த்தயாம வழி பாட்டிற்குச் சில வரிகளால் கிடைக்கும் பொருளை நிவந்தமாக அளித்தனன் என்று அவ்வூர்க் கல்வெட்டொன்று' உணர்த்து கின்றது. இவன் உடன் பிறந்தவன் புக்கத்துறை வல்லவனாகிய அகளங்க சம்புவராயன் என்பான் மதுராந்தகத்திலுள்ள சிவன் கோயிலில் ஒரு நுந்தாவிளக்கு எரித்தற்கு 96 ஆடுகள் அளித் துள்ளனன். இச் சம்புவராயர்களின் வழித் தோன்றல்களே சோழர் கட்குப் பின்னர், தொண்டை மண்டலத்தில் படைவீட்டு இராச்சியம் அமைத்து அரசாண்டவர் என்பது அறியற்பாலது. (6) சுந்தன் கங்கைகொண்டானாகிய துவராபதிவேளான்

3

இவன் பாண்டி நாட்டினன்; இராமநாதபுரம் ஜில்லா விலுள்ள சிவபுரியில் காணப்படும் கல்வெட்டொ ான்றால்4 இவன் ஒருவாட்படையின் தலைவ னென்று தெரிகிறது. இவன் துவராபதி வேள் என்னும் பட்டம் பெற்றவனாயிருத்தல் உணரற்பாலதாம்.

இனி, விக்கிரம சோழனுக்குக் கீழ்ப்பட்டிருந்த ஆந்திர நாட்டுத் தலைவர்களையும் ஆராய்தல் ஏற்புடையதேயாம். (1) மகா மண்டலேசுவரன் பெத்தராசன்

இவன் கி. பி. 1121-ல் பொத்தப்பி நாட்டிலிருந்து ஆட்சி புரிந்துகொண்டிருந்த ஒரு சிற்றரசன் என்பது கடப்பை ஜில்லா

1. Ins. 262 of 1929. 2.S.I.I.,Vol. VII, No. 67.

3. Ins. 400 of 1922.

4. Ins. 47 of 1929.