உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:தி. வை. சதாசிவப் பண்டாரத்தார் ஆய்வுகள் 4.pdf/104

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




பிற்காலச் சோழர் சரித்திரம் - 2

(1) தேவூருடையான் மனதுக்கினியான் ஆகிய விராடராசன்

87

இவன் நாகப்பட்டினந் தாலுகாவிலுள்ள தேவூரில் வாழ்ந்தவன்; வேள், விராடராசன் ஆகிய பட்டங்களை அரசன்பாற் பெற்றவன். மனத்துக்கினியான் என்னும் பெயரினன். இவன் திருப்புகலூரில் முடிகொண்ட சோழப் பேராற்றின் வட கரையில் கி. பி. 1128-ல் ஒரு வைத்தியசாலையும் மடமும் நிறுவி ஆதுரரையும் அநாதரரையும் காப்பாற்றுவதற்கு நிலம் வழங்கியுள்ளனன் என்று அவ்வூரிலுள்ள கல்வெட்டொன்று கூறுகின்றது.

(2) திருச்சிற்றம்பலவன் மானசேகரன்

இவன் விக்கிரம சோழனுடைய அமைச்சர்களுள் ஒருவன்; இவன், சோழர்களின் பண்டைத் தலைநகராகிய பூம்புகார் நகரில் ஒரு மடம் அமைத்து, அந்தணர் ஐம்பதின்மர் நாள் தோறும் அதில் உண்பதற்கு நிலம் அளித்தனன் என்று சாயா வனத்திலுள்ள ஒரு கல்வெட்டு அறிவிக்கின்றது.

(3) சூரை நாயகன் மாதவ ராயன்

இவன் அரும்பாக்கிழான் மணவிற் கூத்தனாகிய காலிங்க ராயனுடைய புதல்வன். இவன் செங்கற்பட்டு ஜில்லாவிலுள்ள திருப்பாசூர்க் கோயிலுக்கு அணிகலங்கள் அளித்தும் நந்தவனம் வைத்தும் தொண்டு புரிந்தா னென்று அவ்வூர்க் கல்வெட் டொன்றால் தெரிகிறது. எனவே, வன், தன் தந்தையைப் போல் சிவபத்தி வாய்ந்தவனா யிருத்தல் அறியத்தக்கது.

(4) கருணாகரன் சுந்தரத் தோளுடையான் ஆகிய வளவன் பல்லவரையன்

இவன் கருணாகரன் சுந்தரத்தோளுடையான் என்னும் பெயருடையவன்; அரசனால் அளிக்கப்பெற்ற வளவன் பல்லவரையன் என்ற பட்டம் பெற்றவன்; பாண்டி நாட்டினன். இவன் நடு நாட்டில் பெண்ணாகடத்திலிருந்த ஓர் அரசியல்

1. Ins. 97 of 1928.

2. Ins. 269 of 1911.

3. Ins. 128 of 1930.