உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:தி. வை. சதாசிவப் பண்டாரத்தார் ஆய்வுகள் 4.pdf/103

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




86

தி.வை.சதாசிவப் பண்டாரத்தார் ஆய்வுகள் - 4

(11) சேதித் திருநாடர் சேவகன்

இவன் சேதி நாடு எனவும் மலையமானாடு எனவும் வழங்கப்பெற்ற நிலப்பரப்பைத் திருக்கோவலூர், கிளியூர் ஆகிய நகரங்களைத் தலைநகர்களாகக் கொண்டு ஆட்சி புரிந்த குறுநில மன்னன்; சேதிராயன், மலையகுல ராசன் என்னும் பட்டங்கள் உடையவன். இவன் கருநாடரோடு போர்புரிந்து வெற்றி எய்தியவ னென்று விக்கிரம சோழனுலா உணர்த்து கின்றது. விக்கிரம சோழன் ஆட்சிக் காலத்தில் இராசேந்திர சோழ மலையகுலராசன் விக்கிரம சோழ சேதிராயன் என்ற இரு குறுநில மன்னர் அந்நாட்டில் இருந்தனர் என்பது தென்னார்க் காடு ஜில்லாவில் காணப்படும் கல்வெட்டுக்களால் அறியக் கிடக்கின்றது.

(12) அதிகன்

இவன், தகடூரைத் தலைநகராகக் கொண்டு கொங்கு மண்டலத்தை ஆட்சி புரிந்துகொண்டிருந்த ஒரு குறுநில மன்னன்; கடைச்சங்க நாளில் வாழ்ந்த அதிகமான் நெடுமானஞ்சியின் வழியில் தோன்றியவன். இவனது தகடூர் இக்காலத்தில் தர்மபுரி என்னும் பெயருடன் சேலம் ஜில்லாவில் உளது. இவ்வதிகமான் வடகலிங்க வேந்தனை வென்றடக்கியவ னென்பது விக்கிரம சோழனுலாவினால் புலனாகின்றது. முதற் குலோத்துங்க சோழன் வடகலிங்கத் தரசனோடு நிகழ்த்திய போரில் கருணாகரத் தொண்டைமானோடு இவனும் அங்குப் போயிருத்தல் கூடும். இவனைப் பற்றிய செய்திகள் வெளிவந்துள்ள கல்வெட்டுக் களில் காணப்படவில்லை.

விக்கிரம சோழனுலாவில் கூத்தரால் குறிப்பிடப்பெற்ற தலைவர்களுள், காரானை காவலன், வல்லவன், திகத்தன் என்போர் யாவர் என்பது இப்போது தெரியவில்லை.

இனி, விக்கிரம சோழன் கல்வெட்டுக்களால் அறியப்படும் தமிழ்நாட்டிலிருந்த அரசியல் அதிகாரிகளை ஈண்டுக் குறிப்பிடுதல் பொருந்தும் எனலாம்.

1. S.I.I., Vol. VII No. 915; Ins. 371 of 1908; Ins. 177 of 1906; Ins. 373 of 1908.