உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:தி. வை. சதாசிவப் பண்டாரத்தார் ஆய்வுகள் 4.pdf/110

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




பிற்காலச் சோழர் சரித்திரம் - 2

93

காலத்தில்தான் எல்லா வளங்களும் நிறைந்த பெருநகராக அமைக்கப்பெற்றதாதல் வேண்டும் என்பது நன்கு புலனா கின்றது. அன்றியும் அம் மாநகரில் இவ்வரசர் பெருமான் முடி சூடிக்கொண்டமைக்குரிய குறிப்பும் இக் கல்வெட்டுத் தொடரில் இருத்தல் அறியத்தக்கது. எனவே, இவன் காலத்தில் தான் தில்லையம்பதியிலும் அங்குள்ள அம்பலவாணரது திருக் கோயிலிலும் பல பல திருப்பணிகள் நிகழ்த்தப் பெற்றன என்பது ஒருதலை. அத் திருப்பணிகளெல்லாம் ஒட்டக்கூத்தர் பாடியுள்ள குலோத்துங்க சோழனுலா' இராசராசசோழனுலா தக்கயாகப் பரணி’ஆகிய மூன்று நூல்களிலும் அவ்வாசிரியரால் விளக்கிக் கூறப்பட்டுள்ளன. ஆகவே அவற்றின் துணைகொண்டு குலோத்துங்க சோழனது தில்லைத் திருப்பணிகளை ஆராய்தல் அமைவுடையதேயாம்.

தில்லைத் திருப்பணி

இவன் தில்லையம்பதியில், தேவர்கோன் மூதூரிலுள்ள பெரு வீதிகள் கண்டு நாணுமாறு நாற்பெருந்தெருக்கள் அமைத்தும் பற்பல மண்டபங்கள் கட்டுவித்தும் அந்நகரைச் சிறப்பித்தான்; சிற்றம்பலத்தைப் பொன்னாலும் பல்வகை மணிகளாலும் அலங்கரித்துப் பணிபுரிந்தான்; பேரம்பலத்தையும் உட் கோபுரத்தையும் திருச்சுற்று மாளிகையையும் மாமேரு போலப் பொன்மயமாக்கினான். எழுநிலைக் கோபுரங்கள் எடுப்பித்தான்; உமாதேவியார் தாம் பிறந்த இமய வெற்பை மறக்கும்படி சிவகாம கோட்டம் மிகப் பெரிதாக அமைத்தான்; அவ்வம்மையார் விழாநாளில் உலாவருதற்குப் பொன்னாலும் மணியாலும் அழகுறுத்தப் பெற்ற தேரொன்று செய்தளித்தான்; திருக்கோயிலில் பொன்னாலாகிய கற்பகத் தருக்களை அமைத்தான்;* நாற்புறமும் கூடங்களோடு திகழும் திருக்குளம் ஒன்று கட்டினான்; இவ்வாறு

1. குலோத்துங்க சோழனுலா, வரிகள் 77-116.

2. இராசராச சோழ னுலா, வரிகள் 57-66.

3. தக்க யாகப் பரணி, தாழிசைகள் 802, 804, 806, 807,808,809,810.

4. இங்ஙனமே இவனுடைய தந்தையாகிய விக்கிரம சோழன் திருச்சிற்றம்பலத் திருக்கோயிற் பணி செய்கையில் பொன்னாலாகிய கற்பகத் தருக்களை அங்கு அமைத்தனன் என்று அவனது பூமாலை மிடைந்து' என்று தொடங்கும் மெய்க்கீர்த்தி உணர்த்துகின்றது. (S.I

I., Vol. V, No. 458)