உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:தி. வை. சதாசிவப் பண்டாரத்தார் ஆய்வுகள் 4.pdf/111

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




94

தி.வை.சதாசிவப் பண்டாரத்தார் ஆய்வுகள் - 4 இவ்வேந்தன் தில்லைத் திருக்கோயிலில் நிகழ்த்திய திருப்பணிகள் அளவற்றன எனலாம். இவன் இத் திருப்பணிகளை எல்லாம் மிக விரிவாகச் செய்யத் தொடங்கியபோது, தில்லைச் சிற்றம்பலத் திற்கு இடம் போதாதவாறு திருமுற்றத்தின்கண் இருந்த திருமால் மூர்த்தத்தைப் பெயர்த்தெடுத்து அலைகடலில் கிடத்தும்படி செய்து அதனால் இடத்தைப் பெருக்கிக் கொண்டு, திருப்பணி களை நிறைவேற்றினான் என்று ஆசிரியர் ஒட்டக்கூத்தர் தம் நூல்களில் கூறியிருப்பது குறிப்பிடத்தக்க நிகழ்ச்சியாகும்.

கி.பி. எட்டாம் நூற்றாண்டில் நந்திவர்மப் பல்லவ மல்லனால் தில்லையம்பல முன்றிலில் நிறுவப்பெற்று அந்நாள் முதல் நிலை பெற்றிருந்த திருமால் மூர்த்தத்தைக் கடலில் எறிந்த வன் செயல் வைணவர் உள்ளத்தைப் பெரிதும் புண்படுத்தி விட்டது. அதுபற்றி வைணவ சமயத்தினர் எல்லோரும் இவனுக்குப் பகைஞர் ஆயினர் எனலாம். அன்னோர் கருதியவாறு இவன் வைணவ சமயத்தில் பெரிதும் வெறுப்புடையவன் என்று கூறுவதற்கு இடமில்லை. () தொன்று தொட்டுச் சமயப் பொறை யுடையவர்களாய் வழி வழி ஒழுகி வந்தவர்கள் என்பது கல்வெட்டுக் களாலும் செப்பேடுகளாலும் நன்கறியக் கிடக்கின்றது. எனவே, இவ்வேந்தர்கள் தம் குடிகள் கைக்கொண்டொழுகிய எல்லாச் சமயங்களையும் விரிந்த மனப்பான்மையோடு பொது நோக்குடன் புரந்துவந்த பெருந்தகையினர் என்பது தெள்ளிது. இவனுடைய பாட்டனாகிய முதற் குலோத்துங்க சோழன் விஷ்ணு வர்த்தனன் என்னும் பெயருடையவன் என்பதும் அவன் தஞ்சாவூர் ஜில்லா விலுள்ள ராசமன்னார் கோயிலில் குலோத்துங்க சோழ

1. ()ை தில்லைத் திருமன்றின் முன்றிற் சிறுதெய்வத் தொல்லைக் குறும்பு தொலைத்தெடுத்து -

(குலோத். உலா, 77-78)

(னை) பொன்னிற் குயிற்றிப் புறம்பிற் குறும்பனைத்து

முன்னர்க் கடலகழின் மூழ்குவித்த - சென்னி

(இராச. உலா, 65-66)

(ைைன) முன்றிற் கிடந்த கருங்கடல் போய்

முன்னைக் கடல்புகப் பின்னைத் தில்லை

மன்றிற் கிடங்கண்ட கொண்டன் மைந்தன் மரகத மேருவை வாழ்த்தினவே -

(தக்கயாகப் பரணி, தா. 777)