உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:தி. வை. சதாசிவப் பண்டாரத்தார் ஆய்வுகள் 4.pdf/131

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




114

தி.வை.சதாசிவப் பண்டாரத்தார் ஆய்வுகள் - 4 சிவாலயம் ஒன்று எடுப்பித்து அதில் இராசராசேச்சுர முடையாரை எழுந்தருளுவித்து வழிபாடு புரிந்தனன். ஆசிரியர் ஒட்டக்கூத்தர், தக்கன் யாகம் அழிக்கப்பட்ட பிறகு உமாதேவியார்க்குப் போர்க்களங் காட்டி அங்கு இறந்தவர்கள் எல்லோர்க்கும் அருள் புரியும் பொருட்டு இராசராசபுரி ஈசர் எழுந்தருளினார் என்று தம் தக்கயாகப்பரணியில் கூறியிருப்பது குறிப்பிடத்தக்கதாகும். கண்டோர் கண்களைப் பிணிக்குஞ் சிற்பத் திறம் வாய்ந்து, முற்காலத்தில் பெருமையுடன் நிலவிய அம் மாடக் கோயில், இக்காலத்தில் தன் சிறப்பனைத்தும் இழந்து அழிவுற்ற நிலையில் உளது. எனினும், அப்பெருங் கோயிலிலுள்ள கருப்ப கிரகத்தின் புறச்சுவரில் சிவனடியார் அறுபத்துமூவருடைய வரலாறுகளை அறிவிக்கும் முறையில் அமைக்கப்பெற்றுள்ள படிமங்களும், திருச்சுற்று மாளிகையின் வட புறத்திலுள்ள சைவாசாரியர் நூற்றெண்மர் படிமங்களும் அக்கோயிலிலுள்ள ராசகம்பீரன் திருமண்டபமும் இன்றும் அதன் பழைய பருமைகளை அறிவுறுத்திக்கொண்டு நம் ராசராசனது புகழ்போல நிலை பெற்றுள்ளன எனலாம். அக்கோயில், இந்நாளில் புகைவண்டியில் செல்வோருள் சிலருடைய கண்களையாவது கவரும் நிலையில், தாராசுரம் நிலையத்திற்கு வடபுறத்தில் இருத்தல் அறியற்பாலதாம்.

அவைக்களப் புலவர்

இவ்வரசன் காலத்தில் அக்ைகளப்புலவராக விளங்கியவர் கவிச் சக்கரவர்த்தியாகிய ஒட்டக்கூத்தரே யாவர். அவர் இவ்வேந்தன் காலத்தில் முதுமை எய்தி உடல் தளர்ச்சி யுற்றிருந்தும் அறிவில் தளர்ச்சியுறாமல் இவன் மீது இராசராச சோழனுலா என்ற நூலொன்று இயற்றியுள்ளனர். அவ் வுலாவை அப்புலவர்பிரான் அரங்கேற்றியபோது, இவன் மகிழ்ச்சி யெய்தி ஒவ்வொரு

1.

வரையப் பெற்றிருக்கும் என்பது திண்ணம். தஞ்சைக் கல்வெட்டுக்களில் அப்பெயரே காணப்பட வில்லை. ஆகவே, இராசராசபுரியைத் தஞ்சை மாநகர் என்று கூறுவது சிறிதும் பொருந்தாது. எனவே, அதில் எடுப்பிக்கப் பெற்ற இராசராசீச்சரமும் தஞ்சைப் பெருவுடையார் கோயில் ஆகாதென்க.

ஒருமருங்குடைய மூல நாயகியோ டொற்றைவெள்விடை யூர்திமேல் இருமருங்குமறைதொழவெழுந்தருளி யிராசராசபுரியீசரே.

(தக். பரணி., தா. 778)