உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:தி. வை. சதாசிவப் பண்டாரத்தார் ஆய்வுகள் 4.pdf/130

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




பிற்காலச் சோழர் சரித்திரம் - 2

113

நகரைத் தான் தங்குதற்கு ஏற்ற நகராகக் கருதி அதனையே தலைநகராக வைத்துக்கொண்டனன் என்று தெரிகிறது. அது சுந்தரசோழன், முதல் இராசேந்திர சோழன்'ஆகிய அரசர் பெருமான்கள், சில ஆண்டுகளில் வீற்றிருந்து செங்கோல் செலுத்திய திருவுடை நகரமாகும். அங்கு அவர்களால் அமைக்கப் பெற்ற அரண்மனைகளுமிருந்தன. நம் இராசராசன் அப்பெரு நகரைப் பல்வகையாலும் சிறப்பெய்தும்படி செய்து அதன் பெயரையும் இராசராசபுரம்' என்று மாற்றித் தான் அங்கு வசித்து வந்தனன். கவிஞர் பெருமானாகிய ஒட்டக்கூத்தர், 'எண்டிசைத் தேவரும் புகுதும் ராசராசபுரி" என்றும் 'செம்பொன் மாட நிரை இராசராசபுரி" என்றும் தக்கயாகப் பரணியில் அதனைப் பாராட்டியிருத்தல் உணரற்பாலது. அந்நகரின் வடபகுதி, இந்நாளில் தாராசுரம் என்னும் பெயருடையதாய்க் கும்பகோணத் திற்கு மேற்புறத்தில் புகைவண்டி நிலையமுள்ள ஓர் ஊராக இருக்கின்றது. அவ்வூரிலுள்ள பெரு வீதிகள் அதன் பண்டைப் பெருமையினை இன்றும் உணர்த்திக் கொண்டிருத்தல் அறியத்தக்கது. ராசராசேச்சுரம் எடுப்பித்தது

இவ்வேந்தன், தான் வசித்து வந்த இராசராசபுரம் என்னும் பெரு நகரின் வட கீழ் பகுதியில் இராசராசேச்சுரம் என்ற

1. இம் மாநகரைப் பற்றிய செய்திகளைச் செந்தமிழ் 43-ஆம் தொகுதி 4, 5 -ஆம் பகுதிகளில் யான் எழுதியுள்ள பழையாறை நகர் என்னுங் கட்டுரையில் காணலாம்.

2. முதல் இராசேந்திர சோழன் ஆட்சியில் பழையாறை நகர் முடிகொண்ட சோழபுரம் என்னும் மற்றொரு பெயரும் உடையதாயிருந்தமை அறியத்தக்கது.

3. கீழைப் பழையாறையாகிய இராசராசபுரம் என்றும் இராசராசபுரத்திலுள்ள திருசத்தி முற்றமுடைய நாயனார் என்றும் கல்வெட்டுக்களில் காணப்படுஞ் செய்திகள் பழை யாறை நகர் இராசராசபுரம் என்று வழங்கப்பெற்றமையை நன்கு உணர்த்துவனவாகும். (Ins. 495 of 1907; Ins. 392 of 1908.)

4. தக். பரணி, தா. 18.

5. தக். பரணி, தா. 17.

6.

தாராக வண்டந் தொடுத்தணிந்தார்

தமக்கிடம் போதத் தமனியத்தாற்

சீராச ராசீச் சரஞ்சமைத்த

தெய்வப் பெருமாளை வாழ்த்தினவே.

(தக். பரணி. தா. 772)

தக்கயாகப் பரணியின் பதிப்பாசிரியர் இராசராசபுரி என்பது தஞ்சை மாநகரம் என்றும் இராசராசீச்சரம் என்பது தஞ்சைப் பெருவுடையார் கோயிலென்றும் எழுதியுள்ளனர். தஞ்சை மாநகர்க்கு இராசராசபுரி என்னும் பெயர் இருந்திருப்பின் அது கல்வெட்டுக்களில்