உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:தி. வை. சதாசிவப் பண்டாரத்தார் ஆய்வுகள் 4.pdf/133

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




116

தி.வை.சதாசிவப் பண்டாரத்தார் ஆய்வுகள் - 4

கண்ணிக்கும் ஒவ்வோராயிரம் பொன் பரிசிலாக வழங்கி அந்நூலை ஏற்றுக்கொண்டான்.1 இவ்வருஞ் செயல், இவன், அந்நூலிடத்தும் அதன் ஆசிரியரிடத்தும் எத்துணை மதிப்பும் அன்பும் வைத்திருந்தனன் என்பதை நன்கு புலப்படுத்துவதாகும். தக்கயாகப் பரணியும் இவன் ஆட்சிக்காலத்தில் கூத்தரால் பாடப் பெற்றுள்ளது என்பது அந்நூலின் இறுதியிலுள்ள வாழ்த்து என்ற பகுதியாலும் இடையிலுள்ள சில பாடல்களாலும் அறியக் கிடக்கின்றது. அன்றியும், அந்நூல் இராசராசன் தலைநகராகிய இராசராசபுரத்தில் இயற்றி அரங்கேற்றப் பெற்றிருத்தல் வேண்டும் என்பது அதிலுள்ள கடைதிறப்புப் பாடல்களால்3 வெளியாகின்றது.

இவ்வேந்தன் காலத்தில் காவிரிக்கரையிலிருந்த இராசேந்திர சோழ சதுர்வேதி மங்கலம் என்னும் ஊரில் கேசவசுவாமி என்ற வடமொழிப் புலவர் ஒருவர் இருந்தனர். அவர் இராசராசனுடைய அரசியல் அதிகாரிகளுள் ஒருவரும் ஆவர். இவன் அவரையே தன் வடமொழி ஆசிரியராகக் கொண்டு அம்மொழியைக் கற்று அதில் புலமை எய்தியிருத்தல் வேண்டும் என்று தெரிகிறது. அவர்பால் நெருங்கிப் பழகி வடமொழி பயின்று வரும் நாட்களில், இம்மன்னன் அவருடைய சிறந்த புலமையையும் ஆற்றலையும் நன்குணர்வானாயினன்; எனவே வடமொழியைக் கற்போர்க்குப் பயன்படுமாறு அம்மொழியில் ஓர் அகராதி எழுதியுதவுமாறு இவன் அவரைக் கேட்டுக் கொண்டதோடு அவ்வகராதி எம்முறையில் அமையவேண்டும் என்பதையும் அறிவித்தனன். இவன் விரும்பியவாறு அவர் எழுதிய வடமொழி அகராதி, 'நானார்த்தார்ணவ சம்க்ஷேபம்' என்பது.' ஆகவே இவன் வடமொழி வளர்ச்சியிலும் ஈடுபட்டிருந்தமை குறிப்பிடத்

1.

தெள்ளித்தம்

முன்னா யகரிலவன் மூதுலாக் கண்ணிதோறும் பொன்னா யிரஞ்சொரிந்த பூபதியும்

என்னும் சங்கர சோழனுலா வடிகளால் இச்செய்தியை அறியலாம். அன்றியும், தமிழ்விடு தூதிலும் இந்நிகழ்ச்சி குறிக்கப்பட்டுள்ளது.

2. தக். பரணி, தாழிசைகள் 549, 772, 774, 775, 776, 777.

3. தக். பரணி, தாழிசைகள் 16, 17,18,19,20.

4. Journal of Oriental Research, Vol. XI, p. 2.