உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:தி. வை. சதாசிவப் பண்டாரத்தார் ஆய்வுகள் 4.pdf/134

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




பிற்காலச் சோழர் சரித்திரம் - 2

117

தக்கது. கவிச் சக்கரவர்த்தியாகிய ஒட்டக்கூத்தர் வடமொழி யிலும் புலமை எய்தியிருந்தனர் என்பது அவர் இயற்றியுள்ள நூல்களால் இனிது விளங்கும்.

இனி இவ்வேந்தன், தன் அவைக்களத்தில் புலவர்கள் தமிழ் நூல்களிலுள்ள நயங்களை எடுத்துக்கூற, அவற்றை விரும்பிக் கேட்டு மகிழ்ந்து வீற்றிருக்கும் இயல்பினனாக இருந்தனன். ஆதலால், இவனது அரசவை ‘ஓவாது செய்ய தமிழ் முழங்கத் தெய்வப் பொதியிலாய்' விளங்கியது என்று ஆசிரியர் ஒட்டக்கூத்தர் பாராட்டியுள்ளார். அக் கவிஞர் கோமான் இவன் ஆட்சிக் காலத்தில்தான் உலக வாழ்வை நீத்து இறைவன் திருவடியை யடைந்தனர் என்று தெரிகிறது.

ராசராசனது சிறப்புப் பெயர்கள்

ம்

.

இம் மன்னர் பெருமானுக்கு அந்நாளில் வழங்கிய சிறப்புப் பெயர்கள், சோழேந்திர சிங்கன், தெய்வப் பெருமாள், கண்டன், சொக்கப் பெருமாள், இராச கம்பீரன் என்பன. இவற்றுள், சோழந்திர சிங்கன்,' இராச கம்பீரன்' என்ற இரண்டு பெயர்களும் இவன் கல்வெட்டுக்களில் காணப்படுவதோடு முறையே இராசராச னுலாவிலும் தக்கயாகப் பரணியிலும் கூறப்பட்டும் உள்ளன. எஞ்சிய மூன்றும் உலா, பரணி ஆகிய இரு நூல்களில் மாத்திரம் காணப்படுகின்றன. இவற்றுள் சொக்கப் பெருமான் என்பது தக்கயாகப் பரணி உரையாசிரியர் கூற்றால்தான் அறியப்படுகின்றது. இராசகம்பீரன் என்பது இவனது ஆட்சியின் பிற்பகுதியில் வழங்கிய சிறப்புப் பெயராகும். சோழேந்திர சிங்கநல்லூர், இராசகம்பீர நல்லூர், இராச கம்பீர

4

1. Ins.336 of 1917; இராசராச சோழ னுலா வரிகள் 252, 685

5

3

2. தக். பரணி, தா. 774. Ins. 440 of 1912 and Ins. 146 of 1937-38

3. மேற்படி தாழிசைகள் 772, 549.

இராசராச சோழ னுலா வரிகள் 76,726.

4. 'முன்றிற் கிடந்த' என்று தொடங்கும் 777ஆம் தாழிசையின் உரையிலுள்ள 'குலோத்துங்க சோழ தேவர் மைந்தராகிய சொக்கப்பெருமாளான ராசராச தேவரை வாழ்த்தின' என்ற பகுதியால் இதனை உணரலாம்.

5. இராசகம்பீர நல்லூர் என்று இரண்டூர்களுக்குப் பெயர் வைத்து அவற்றைத் திருப்பாலைத் துறை இறைவர்க்கும் திருச்செந்துறை இறைவர்க்கும் நம் இராசராசன் இறையிலியாக அளித்து உள்ளனன் என்பது இரு கல்வெட்டுக்களால் அறியப்படுகின்றது. (Ins. 440 of 1912; Ins. 146 of 1937 - 38).