உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:தி. வை. சதாசிவப் பண்டாரத்தார் ஆய்வுகள் 4.pdf/136

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




பிற்காலச் சோழர் சரித்திரம் - 2

119

அரசாண்டவன். கி. பி. 1058-ல் அவ்வூரிலுள்ள திருமால் கோயிலைக் கற்றளியாக எடுப்பித்த மலாடுடையான் நரசிங்கவர்மனுடைய பேரன்.' இவனும் அக்கோயிலுக்குத் தொண்டு புரிந்துள்ளனன். ஈண்டுக் குறிக்கப் பெற்ற மலையமானாட்டுச் சிற்றரசர் மூவரும் ஒருவருக்கொருவர் என்ன முறையினர் என்பது இப்போது புலப்படவில்லை.

2. கூடலூர் ஆளப்பிறந்தான் மோகன் ஆகிய இராச ராச காடவராயன்:

இவன் இராசராசனுடைய தந்தையின் காலத்தில் தென்னார்க்காடு ஜில்லாவின் ஒரு பகுதியில் நாடு காவல் புரியும் அரசாங்க அதிகாரியாயிருந்த குலோத்துங்க சோழ காடவ ராயனுடைய தமையன்; இவன் மலையவிச்சாதிரி நல்லூரி லிருந்து பல வரிகளால் கிடைக்கக்கூடிய பொருள் முழுதும் கி.பி.1152-ல் எலவானாசூர்க் கோயிலுக்கு நிவந்தமாக அளித்துள்ளான்.2

3. இராசேந்திர சோழ பல்லவராதித்தன்:

இவன் பல்லவர் குலத் தோன்றல். இத்தலைவன் கோலார் ஜில்லா விலுள்ள சூரூர் மலையில் ஒரு கோயில் எடுப்பித்து அதற்குத் தேவதான இறையிலி கி. பி. 1153-ல் அளித்திருத்தலால்’ இவன் நம் இராசராசன் பிரதிநிதியாகக் கங்கநாட்டிலிருந்திருத்தல் வேண்டுமென்று தெரிகிறது. இவன் காடுவெட்டி எனவும், காஞ்சிபுர பரமேசுவரன் எனவும் அக் கோயிற் கல்வெட்டில் குறிக்கப்பட்டிருத்தல் அறியத் தக்கது.

4. சம்புவராயர்கள்:

இவர்களுள், இராசராசன் காலத்திலி ருந்தவர்கள், நித்த விநோத சம்புவராயன், இராச நாராயண சம்புவராயன் ஆகிய இருவருமே யாவர். இன்னோருள் நித்த விநோத சம்புவராயன் மனைவி சோறுடையாள் என்பாள்" தென்னார்க்காடு ஜில்லா 1. Ep. Ind., Vol. VII, p. 147.

2. Ins. 166 of 1906.

3. Ep. Car., Vol. X, KI. 75.

4. Ins. 168 of 1918.