உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:தி. வை. சதாசிவப் பண்டாரத்தார் ஆய்வுகள் 4.pdf/137

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




120

.வை. சதாசிவப் பண்டாரத்தார் ஆய்வுகள் -4

பிரம்மதேசத்திலுள்ள கோயிலுக்குத் திருவிளக்கு வைத்து அதற்காக 32 பசுக்கள் அளித்துள்ளனள். இராச நாராயண சம்புவராயனுக்கு அம்மையப்பன் சீயன் பல்லவாண்டான் என்னும் பெயர் அந்நாளில் வழங்கியது என்று தெரிகிறது. இவன், செங்கற்பட்டு ஜில்லாவில் நாடு காவல் புரியும் அரசாங்க அதிகாரியாயிருந்தனன். இவன், அச்சிறுபாக்கம், மூந்நூர், ஆகிய ஊர்களிலுள்ள கோயில்களுக்கு நிவந்தங்கள் அளித்துள்ளமை குறிப்பிடத் தக்கதாகும்.

5. இராசராச வங்கார முத்தரையன்:

3

1

2

இவன் தென்னார்க்காடு ஜில்லாவில் திட்டக்குடி, பெண்ணாகடத்தைச் சூழ்ந்த பிரதேசத்தில் நாடு காவல் புரியும் அரசாங்க அதிகாரியா யிருந்தவன். சேந்தன் கூத்தாடுவான் என்பது இவனது இயற்பெயர். இராசராச வங்கார முத்தரையன் என்பது அரசனால் அளிக்கப்பெற்ற பட்டமாகும். இவன் திட்டக் குடியில் தனக்குப் பாடிகாவல் வரியாகக் கிடைத்தற் குரிய நெல்லை ஆண்டுதோறும் அவ்வூர்க் கோயிலதிகாரிகள் நிவந்தமாகப் பெற்றுக்கொண்டு, இறைவர்க்கு அர்த்தயாம வழிபாடு செய்து வருமாறு ஏற்பாடு செய்தனன் என்று அங்குள்ள கல்வெட் டொன்று உணர்த்துகின்றது.

4

6. குலோத்துங்க சோழ கடம்பராயன்:

இவன் புதுக் கோட்டையைச் சார்ந்த நிலப் பரப்பில் ராசராசன் காலத்தி லிருந்த ஓர் அதிகாரியாவன். இவன் குடுமியான் மலையிலுள்ள திருநலக் குன்றமுடையார் கோயிலில் நாள்தோறும் இரண்டு திருவிளக்கு வைப்பதற்கு நிவந்தம் அளித்துள்ளனன் என்பது அவ்வூர்க் கல்வெட்டொன்றால் அறியக் கிடக்கின்றது.5

1. S. I. I., Vol. VII. No. 458.

2. Ins.52 of 1919.

3. Ins. 28 of 1908.

4. S. S. I. Vol. VIII, No. 285.

5. Inscriptions of Pudukkottai State, No. 135.