உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:தி. வை. சதாசிவப் பண்டாரத்தார் ஆய்வுகள் 4.pdf/138

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




பிற்காலச் சோழர் சரித்திரம் - 2

7. திருச்சிற்றம்பலமுடையான் பெருமான் நம்பியான

பல்லவராயன்:

121

இவன் சயங்கொண்ட சோழ மண்டலத்து ஆமூர்க் கோட்டத்துச் சிறுகுன்ற நாட்டுக் காரிகைக் குளத் தூரினன்; இராசராசன் ஆட்சியில் நிலவிய ஒரு சிறந்த படைத்தலைவன்; இவ்வரசனால் அளிக்கப்பெற்ற பல்லவராயன் என்னும் பட்டம் பெற்றவன்; இவனது அன்பிற்குரியவனாகிச் சிறந்த உசாத் துணையாய் விளங்கியவன்; சேரனைப் போரில் வென்று அவன்பால் திறை திறைகொண்டு இவனுக்கு வெற்றிமாலை சூட்டியவன்; சோழ மண்டலத்து இராசாதிராச வளநாட்டுத் ருவிந்தளூர் நாட்டுக்குளத்தூரில் தன் அரசன் பெயரால் இராசராசேச்சுரம் என்னுங் கோயில் எடுப்பித்து அதற்கு நிவந்தங்கள் வழங்கியவன்". மாயூரத்திற்கு அண்மையிலுள்ள அவ்வூர், இப்படைத் தலைவனுடைய பெயரால் பல்லவராயன் பேட்டை என்று வழங்கி வருகின்றது. இவன் கூத்தரால் தக்க யாகப் பரணியில் புகழப் பெற்றவன் ஆவன்.

5

3

4

இனி, இராசராசன் ஆட்சியின்கீழ் ஆந்திர நாட்டில் சிற்றரசர்களாக இருந்தோர், மகா மண்டலேசுவரன், திரிபுவன மல்லதேவ சோட மகாராஜன், ஜிக்கிதேவ சோட மகாராஜன், புத்த ராஜன், மகா மண்டலேசுவரன் குலோத்துங்க ராசேந்திர சோடன்,ராசேந்திரகோண லோகராஜன்' மகா சாமந்தன் ஜிய்யருவாரு என்போர். இவர்களுள், முன்னவர் இருவரும் கரிகாலன் மரபினர் என்று தம்மைக் கூறிக்கொள்வது குறிப்பிடத் தக்கது. குலோத்துங்க ராசேந்திர சோடன் என்பான் வெலநாண்டுச் சோழன் ஆவன். இவர்கள் ஆந்திர தேயத்தில்

8

1. தக். பரணி, தா. 236.

2. Ins. 427 of 1924 and 435 of 1924.

3. Ins. 203 of 1897; S. S. I. Vol. VIII, No. 163.

4. Ins. 193 of 1897; S. S. I. Vol. VI, No. 153.

5. Ins. 216 of 1893; S. S. I. Vol. VIII, No. 1050.

6. Ins. 217 of 1893; S. S. I. Vol. IV, No. 1051, Ins. 132 of 1917.

7. Ins. 213 of 1897; S. S. I. Vol. VI, No. 175.

8. Nellure Inscriptions O. 51.