உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:தி. வை. சதாசிவப் பண்டாரத்தார் ஆய்வுகள் 4.pdf/139

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




122

தி.வை.சதாசிவப் பண்டாரத்தார் ஆய்வுகள் - 4

வேங்கி நாடு முதலானவற்றிலிருந்து அரசாண்டவர் ஆவர். இன்னோர் நம் இராசராசனுக்குக் கீழ்ப்பட்டிருந்த சிற்றரசர்கள் என்பது இவர்களுடைய கல்வெட்டுக்களால் அறியப்படு கின்றது.

இராசராசன் எதிரிலிப் பெருமாளுக்கு இளவரசுப் பட்டங் கட்டியது:'

இராசராசன் தன் வாழ்நாளின் இறுதிக் காலத்தில் பழை யாறையிலிருந்த ஆயிரத்தளி அரண்மனையில் நோய்வாய்ப் பட்டுத் துன்புற்ற நிலையில் இருந்தனன். அதுபோது தான் அந் நோயினின்று விடுபட்டுப் பிழைக்க முடியாது என்பதையும்

வன் உணர்ந்துகொண்டான். அந்நாளில் இவனுடைய மக்கள் இருவரும் ஈராண்டும் ஓராண்டும் நிரம்பிய இளங்குழந்தை களாக இருந்தனர். ஆகவே, அவர்கள் முடிசூட்டப் பெறு வதற்குத் தக்க வயதினராக இல்லை. அதுபற்றி அரசன் பெருங் கவலை கொண்டு, அந்நிலையில் செய்யத்தக்கது யாது என்பதை ஆராய்ந்து, தன் தாயத்தினருள் ஒருவனாகிய நெறியுடைப் பெருமாளின் புதல்வன் எதிரிலிப் பெருமாளைக் கங்கை கொண்ட சோழபுரத்திலிருந்து வருவித்து, அவ்வரச குமாரனுக்கு இளவரசுப் பட்டங் கட்டிவிட்டு, அந்நாளிலேயே இறந்து போனான். அச்சமயத்தில் சோழ நாட்டில் ஆட்சி யுரிமை பற்றித் தாயத்தினருள் கலகம் ஏற்படுமோ என்ற ஐயப்பாடு உண்டாயிற்று. உடனே, அமைச்சர் தலைவனாகிய திருச்சிற்றம்பல முடையான் பெருமானம்பி என்பான் இராச ராசனுடைய அந்தப்புர மகளிரையும் இளஞ் சிறுவர் இருவரையும் பரிவாரங்களோடு ஆயிரத்தளி அரண்மனையி லிருந்து அழைந்து வந்து, பாது காவல் மிக்கதாய் அதற்கண்மையிலிருந்த இராசராசபுரத் தரண்மனையில் வைத்துக் காப்பாற்றினான். அக்காலத்தில் உள் நாட்டில் குழப்பம் உண்டாகாதவாறு நாட்டையுங் காத்தனன். அன்றியும், அவ்வமைச்சன், இராசராசன் இறக்குந் தறுவாயில் இளவரசுப் பட்டங்கட்டிய எதிரிலிப் பெருமாளுக்கு அப்பட்டம் பெற்ற நான்காம் ஆண்டில் இராசாதிராசன் என்னும் பெயருடன்

1. இப்பகுதி பல்லவராயன் பேட்டைக் கல்வெட்டை ஆராய்ந்து எழுதியதாகும். (Ep. Ind., Vol.., XXI, No. 31).