உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:தி. வை. சதாசிவப் பண்டாரத்தார் ஆய்வுகள் 4.pdf/140

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




பிற்காலச் சோழர் சரித்திரம் - 2

123

திரு அபிடேகஞ் செய்து நாடும் உடன் கூட்டமும் ஒன்றுபட்டுச் செல்லுமாறு செய்தான்; இராசராசன் தாயத்தினராய்ச் சோழ இராச்சியத்திலிருந்த மற்றையோர் மிகைசெய்யாதபடியும் பார்த்துக்கொண்டான். இவ்வமைச்சன் எதிரிலிப் பெருமாளுக்கு முறைப்படி முடி சூட்டுவதற்கு நான்கு ஆண்டுகள் வரையில் காலம் தாழ்த்தினமைக்குக் காரணம் நாடும் உடன் கூட்டமும் ஒன்றுக்கொன்று முரண்பட்ட கருத்துக்களுடன் இருந்தமை போலும்.

ராசராசனது ஆட்சியின் இறுதிக்காலம்:

இவ் வேந்தனது 28-ஆம் ஆட்சி யாண்டுக் கல்வெட்டு ஆந்திர நாட்டில் காணப்படுவதால் ல் காணப்படுவதால்' இவனது ஆட்சியின் இறுதிக் காலம் கி. பி. 1173-ஆம் ஆண்டாதல் வேண்டு மென்று கருதப்படுகிறது. ஆனால், சோழ நாட்டிலும் தொண்டை நாட்டிலும் இவனது 19-ஆம் ஆட்சி யாண்டுக் கல்வெட்டுக்கள்’ தான் காணப் படுகின்றன. அவற்றால் கி. பி. 1166 வரையில் இவன் அரசாண்டவன் ஆதல் வேண்டும் என்பது புலனாகின்றது. தஞ்சாவூர் ஜில்லா பல்லவராயன் பேட்டையிலுள்ள கல்வெட் டொன்றால் இவன் கி. பி. 1163-ஆம் ஆண்டின் தொடக்கத்தில் இறந்திருத்தல் வேண்டுமென்பது உய்த்துணரப் படுகின்றது.' ஆகவே கி.பி. 1173,1166, 1163 ஆகிய மூன்றாண்டுகளுள் இராசராசன் எவ்வாண்டில் இறந்திருத்தல் வேண்டுமென்பது ஆராய்தற்குரியது. இவ்வேந்தன் தன் இறுதி நாளில் எதிரிலிப் பெருமாள் என்பவனுக்கு இளவரசுப் பட்டங் கட்டிவிட்டு அன்றே இறந்தனன் என்பது மேலே குறிப்பிட்ட பல்லவராயன் பேட்டை கல்வெட்டால் அறியப்படுகின்றது. எனவே, எதிரிலிப் பெருமாள் இளவரசுப் பட்டங் கட்டப்பெற்ற நாளே

1. Ins. 181 of 1899; S. S. I. Vol. VI, No. 626.

2. The Cholos, Vol. II, p. 87.

3. Ins. 86 of 1928; Ins. 411 of 1909.

4. Ep. Ind. Vol. XXI, No. 31.

5

5. உடையார் விக்கிரம சோழதேவர் பேரனார் நெறியுடைப் பெருமாள் திருமகனார் எதிரிலிப் பெருமாளைப் பெரிய தேவர் துஞ்சி யருளின நாளிலே மண்டைக் கவிப்பித்துப் போந்தாரானவாறே இவரைத் திரு அபிஷேகம் பண்ணுவிக்கக் கடவராக. (பல்லவராயன் பேட்டைக் கல்வெட்டு, வரிகள் 11, 12).