உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:தி. வை. சதாசிவப் பண்டாரத்தார் ஆய்வுகள் 4.pdf/141

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




124

தி.வை.சதாசிவப் பண்டாரத்தார் ஆய்வுகள் - 4

இராசராசன் இறந்த நாளாதல் வேண்டு மென்பது தெள்ளிது. எதிரிலிப் பெருமாள் கி. பி. 1163-ஆம் ஆண்டின் தொடக்கத்தில் பட்டம் பெற்றனன் என்பது கணிதநூல் வல்லார் கண்ட முடிபாகும். ஆகவே இராசராசனும் அவ்வாண்டில்தான் இறந்திருத்தல் வேண்டு மென்பது திண்ணம்.

1

இனி, சோழ நாட்டிலும் தொண்டை நாட்டிலும் இராச ராசனது 18, 19ஆம் ஆட்சி யாண்டுக் கல்வெட்டுக்களும்’ ஆந்திர நாட்டில் 26, 28ஆம் ஆட்சி யாண்டுக் கல்வெட்டுக்களும்3 காணப்படுவதற்குக் காரணம் யாது என்பது நோக்கற்பாலது.

எதிரிலிப் பெருமாள் இளவரசுப் பட்டம் பெற்ற நான்காம் ஆண்டாகிய கி. பி. 1166-ல் தான் இராசராசன் என்னும் பெயருடன் முறைப்படி அரசனாக அபிடேகஞ் செய்யப் பெற்றனன்4 என்பது பல்லவராயன் பேட்டைக் கல்வெட்டின் துணை கொண்டு உறுதி செய்யப்பெற்ற செய்தியாகும். அவ்வாண்டு வரையில் இராசராசன் ஆட்சியாண்டுகள் கல்வெட்டுக்களில் குறிக்கப்பெற்று வந்தமையால்தான் இவனது 18, 19 -ஆம் ஆட்சியாண்டுக் கல்வெட்டுக்கள் சோழ நாட்டிலும் தொண்டை நாட்டிலும் காணப்படுகின்றன என்பது அறியற்பாலதாம்.

சோழ நாட்டிலேயே இராசராசனது 19-ஆம் ஆட்சி ஆண்டிற்குப் பிறகு இவன் கல்வெட்டுகள் இல்லையெனின் அதற்கு வடக்கே நெடுந்தூரத்திலுள்ள ஆந்திர நாட்டில் இவனது 26, 28 -ஆம் ஆட்சி யாண்டுக் கல்வெட்டுக்கள் எங்ஙனம் இருத்தல் கூடும்? ஆகவே, இவன் இறந்த பின்னரும் ஆந்திர நாட்டுக் கல்வெட்டுக்களில் இவன் ஆட்சி ஆண்டுகள் வரையப் பெற்றிருப்பது அறியாமையால் நேர்ந்த பிழையே எனலாம். ஆதலால் அவ் வாண்டுகளில் இராசராசன் உயிர் வாழ்ந் திருந்தனன் என்று கொள்வது எவ்வாற்றானும் ஏற்புடைத்தன்று.

1. Ep. Ind. Vol. IX, p. 211.

2.S.S. I. Vol. VII, Nos. 458 and 483; Ins. 28 of 1908; Ins. 411 of 1909; Ins. 86 of 1928.

3. Ins. 704 of 1920; Ins. 181 of 1899.

4. 'நாலாந் திருநக்ஷத்திரத்திலே இராஜாதிராஜ தேவர் என்று திருஅபிஷேகம் பண்ணுவித்து’ (பல்லவராயன் பேட்டைக் கல்வெட்டு, வரிகள் 12, 13).

>