உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:தி. வை. சதாசிவப் பண்டாரத்தார் ஆய்வுகள் 4.pdf/149

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




132

1

தி.வை.சதாசிவப் பண்டாரத்தார் ஆய்வுகள் - 4 கொள்வதுதான் நலமென்று கருதி, அவனுக்குச் சில பரிசில்கள் அனுப்பினான். குலசேகர பாண்டியன், சோழ மன்னன் தனக்குச் செய்த எல்லா நன்மைகளையும் மறந்து, சிங்கள வேந்தன் அனுப்பிய பரிசில்களைப் பெற்றுக்கொண்டு, அவனோடு நட்பும் மணவினைத் தொடர்பும் வைத்துக்கொள்ளவும் உடன் பட்டான். அன்றியும், அக் குலசேகர பாண்டியன் சோழ இராச்சியத்திற்கு விரோதமான காரியங்களைச் செய்யத் தொடங்கி, இராசாதிராச சோழன்பால் அன்புடையவர்களான இராசராசக் கற்குடி மாராயன், இராசகம்பீர அஞ்சு கோட்டை நாடாழ்வான் முதலான பாண்டி நாட்டுத் தலைவர்களை அந்நாட்டைவிட்டு வெள்ளாற்றுக்கு வட கரையிலே போகும்படி செய்து, சிங்களப் படைத் தலைவர்களின் தலைகளை மதுரைக் கோட்டை வாயிலிலிருந்து எடுத்து விடுமாறும் செய்தான். அந்நிலையில், குலசேகர பாண்டியனும் பராக்கிரபாகுவும் நண்பர்களாகி ஒன்றுபட்டிருத்தலை யுணர்த்தும் சில ஓலைகளும் இராசாதிராச சோழனுக்குக் கிடைத்துவிட்டன. எனவே, இவன் குலேசேகரப் பாண்டியன் செயல்கள் அனைத்தையும் பல்வகையாலும் நன்கறிந்து கொண்டான்; பின்னர் நன்றி மறந்து பகைவனோடு சேர்ந்து கொண்ட அப் பாண்டியனை அரியணையிலிருந்து நீக்கி, பராக்கிரம பாண்டியன் புதல்வன் வீரபாண்டியனுக்கு அதனை அளிக்குமாறு தன் அமைச்சன் அண்ணன் பல்லவ ராயனுக்கு ஆணையிட்டான். உடனே, அவன் மதுரை மாநகர் மீது படையெடுத்துச் சென்று, மிகச் சுருங்கிய நாட்களில் லசேகர பாண்டியனைப் போரிற் புறங்கண்டு வீர பாண்டியனுக்குப் பாண்டி நாட்டை அளித்துவிட்டுச் சோழ நாட்டிற்குத் திரும்பினான். வீர பாண்டியனும், அப் பல்லவராயன் தனக்கு வழங்கிய பாண்டி நாட்டை மதுரையம்பதியிலிருந்து

1.

3

'பாண்டியனார் குலசேகரர் தமக்கு முன்பு செய்த நன்மைகளும் பாராதே ஈழத்தானுடன் சம்பந்தம் பண்ணவும்' (Ibid.) என்னுங் கல்வெட்டுத் தொடர்களால் இவ்வுண்மை நன்கறியக்கிடத்தல் காண்க.

2. வெள்ளாற்றிற்கு வடகரையிலுள்ள நிலப் பரப்புச் சோழ நாட்டைச் சேர்ந்ததாகும். அந்நாளில் இவ்வெள்ளாறு, பாண்டி நாட்டின் வட எல்லையாகவும் சோழ நாட்டின் தென் எல்லையாகவும் இருந்தமை அறியத் தக்கது.

3. இது முடிய வரையப்பெற்றுள்ள நிகழ்ச்சிகள் எல்லாம் திருவாலங்காட்டுக் கல்வெட்டில் காணப்படுவனவாகும். (Ep. Ind., Vol. XXII, No. 14.)