உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:தி. வை. சதாசிவப் பண்டாரத்தார் ஆய்வுகள் 4.pdf/148

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




பிற்காலச் சோழர் சரித்திரம் - 2

ம்

131

முடையான் அம்மையப்பனான அண்ணன் பல்லவ ராயன் என்பான் அதனை யறிந்து ஈழ நாட்டுச் சிங்காதனம் பற்றிப் பராக்கிரம பாகுவோடு பகைமை கொண்டு சோழ நாட்டிற்கு வந்து தங்கியிருந்த அவ் வேந்தன் மருமகன் சீவல்லபனுக்கு' ஆற்றல் வாய்ந்த பெரும் படை யுதவி ஈழத்தின் மீது படை யெடுத்துச் செல்லுமாறு செய்தனன். சீவல்லபனோடு ஈழ நாட்டிற்குச் சென்ற அப் படை ஊராத்துறை, வல்லிகாமம், மட்டிவாழ் உள்ளிட்ட ஊர்களிலே புகுந்து, புலைச்சேரி ஊர் களையும் அழித்து, அவ் ஊர்களிலிருந்த யானைகளையும் மாதோட்டம் உள்ளிட்டவற்றை ஏற்றுக்கொண்டு, ஈழ மண்டலத்தில் கீழ் மேல் இருபதின் காதத்திற்கு மேற்படவும் தென்வடல் முப்பதின் காதத்திற்கு மேற்படவும் அழித்து,சில சிங்களத் தலைவர்களைக் கொன்று, எஞ்சியோரைச் சிறைப் பிடித்துக் கொண்டு சோழ நாட்டிற்குத் திரும்பியது. அப் படையெடுப்பில் ஈழ நாட்டிலிருந்து கொண்டு வரப்பட்டவை யெல்லாம், அமைச்சர் தலைவனான அண்ணன் பல்லவராயனால் இராசாதிராச சோழனுக்கு அளிக்கப்பெற்றமை குறிப்பிடத் தக்கதாகும்.

சீவல்லபன், சோழ மன்னன் துணைகொண்டு நிகழ்த்திய படையெடுப்பினால் பராக்கிரம பாகுவின் முயற்சிகள் எல்லாம் பயன்படாமற் போயின. அன்றியும், ஈழ நாட்டில் அமைதி யின்மையும் பொருளழிவும் மிகுதியாக ஏற்பட்டு விட்டன. அவற்றைக் கண்ட அச் சிங்கள வேந்தன், தான் பராக்கிரம பாண்டியன் புதல்வனை ஆதரித்தமையால் அத்தகைய துன்பங்கள் உண்டாயின என்ற முடிபிற்கு வந்தான். உடனே, அவன் மதுரையிலிருந்து ஆட்சி புரிந்துகொண்டிருந்த குலசேகரனைப் பாண்டி வேந்தனாக ஏற்றுக்கொண்டு உற்ற நண்பனாக வைத்துக்

1. Ep. Ind., Vol. XXII. No. 14.

2. இவன் பராக்கிரம பாகுவின் உடன் பிறந்தாளான மித்தா என்னும் இராச குமாரத்தியின் மகன். இவன் தந்தை மானாபரணன் என்பான்.

3. 'ஈழத் தானினவாய் இவ்வூர்களில் நின்ற ஆனைகளும் கைக்கொண்டு ஈழ மண்டலத்தில் கீழ்மேல் இருபதின் காத மேற்படவும் தென்வடல் முப்பதின் காதமேற்படவும் அழித்து' என்னும் திருவாலங்காட்டுக் கல்வெட்டுப் பகுதியால் இந் நிகழ்ச்சிகளையறியலாம். (Ep. Ind., Vol. XXII, p. 90)