உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:தி. வை. சதாசிவப் பண்டாரத்தார் ஆய்வுகள் 4.pdf/147

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




130

தி.வை.சதாசிவப் பண்டாரத்தார் ஆய்வுகள் - 4 பிறகு நடைபெற்ற போர்களில், நம் இராசாதிராச சோழன் படைத்தலைவனாகிய திருச்சிற்றம்பலமுடையான் பெருமா னம்பிப் பல்லவராயன், சிங்களப் படைகளை வென்று புறங் காட்டி யோடும்படிச் செய்தமையோடு, சிங்களப் படைத் தலைவர் இருவரையுங் கொன்று அவர்கள் தலைகளை யாவருங் காணுமாறு மதுரைக் கோட்டை வாயிலிலும் வைப்பித்தான்.1 பிறகு, அவன் குலசேகர பாண்டியனுக்கு மதுரையம்பதியை அளித்து ஆட்சிபுரிந்து வருமாறு செய்தான்.' சில ஆண்டுகள் வரையில் அவ்வேந்தன் ஆட்சியும் பாண்டி நாட்டில் நடை பெற்று வந்தது எனலாம்.

இனி, சிங்கள மன்னனாகிய பராக்கிரமபாகு என்பான், தன் எண்ணத்தை நிறைவேற்ற முடியாமற் போயினமையால் இராசாதிராச சோழனையும் இவனால் ஆதரிக்கப் பெற்று மதுரையில் ஆட்சி புரிந்துகொண்டிருந்த குலசேகர பாண்டி யனையும் மீண்டும் தாக்கிப் போரிற் புறங் காணவேண்டும் என்ற கருத்தினனாய், ஈழ நாட்டில் ஊராத்துறை,; புலைச்சேரி, மாதோட்டம், வல்லிகாமம், மட்டிவாழ் என்னும் ஊர்களில் தன் படைகளைத் திரட்டிப் படகுகளும் தயாரித்தான். அச்செய்தி சோழ நாட்டிற் கெட்டியது. அந்நாட்களில் இராசாதிராச சோழனுடைய அமைச்சர் தலைவனாக விளங்கிய வேதவன

1. Ep. Ind.; Vol. XXI, No. 31. இவை பல்லவராயன் பேட்டைக் கல்வெட்டில் காணப்படுஞ் செய்திகள் ஆகும்.

2. Ep. Ind.; Vol. XXI, No. 31. (Pallavarayanpettai Inscription of Rajadhiraja II, line. 19)

3.

ஊராத்துறை என்பது யாழ்ப்பாணத்திற்கு மேற்கேயுள்ள ஒரு தீவில் உளது. இந்நாளில் 'கயட்ஸ்' (Kayts) என்று வழங்குகின்றது. இது பராக்கிரம பாகுவின் காலத்தில் ஒரு சிறந்த கடற்றுறைப் பட்டினமாக இருந்ததாம். ஊர்காவல் துறை என்பதே ஊராத்துறை எனச் சிதைந்து போயிற்று என்று கூறுவர். புலைச்சேரி என்பது மகா வம்சத்தில் சொல்லப்பட்டுள்ள புனலச்சேரியேயாம். மாதோட்டம் என்பது சைவ சமய குரவர்களால் பாடப்பெற்ற ஈழ நாட்டுத் தலங்கள் இரண்டனுள் ஒன்றாகும். அங்குள்ள திருக்கோயில் திருக்கேதீச்சுரம் என்னும் பெயருடையது 'மாதோட்டமான இராசராசபுரம்' என்னும் கல்வெட்டுப் பகுதியால் (S.I.I., Vol. IV, No. 1412) அவ்வூர்க்கு இராசராசபுரம் என்ற மற்றொரு பெயரும் உண்டு என்று தெரிகிறது. வல்லிகாமம் என்பது இந்நாளில் வலிக்காமம் என்ற பெயருடன் மன்னார்க்குத் தென்கிழக்கில் 5 மைலில் உள்ளது. மட்டிவாழ் என்பது மட்டுவில் என்ற பெயருடன் யாழ்ப்பாணத்திற்குக் கிழக்கே 10 மைல் தூரத்தில் உளது. (Ibid, p. 187)

4. Ins. 171 of 1925.