உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:தி. வை. சதாசிவப் பண்டாரத்தார் ஆய்வுகள் 4.pdf/146

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




பிற்காலச் சோழர் சரித்திரம் - 2

129

கொண்டு மறுபடியும் போர்க்குத் தயாராயினான். அதுபோது அத்தலைவர்கள் குலசேகர பாண்டியனோடு சேர்ந்து கொள்ளவே, எல்லோரும் சேர்ந்து வீரபாண்டியனைப் போரிற் புறங்கண்டு மதுரையை விட்டுத் துரத்திவிட்டனர். அந்நிகழ்ச்சிகளை அறிந்த இலங்காபுரித் தண்ட நாயகன், ஈழ நாட்டிலிருந்து தனக்குத் துணைப் படை அனுப்புமாறு பராக்கிரம பாகுவுக்கு ஒரு கடிதம் விடுத்தான். அவ்வேந்தன் ஜகத் விஜய தண்ட நாயகன் தலைமையில் பெரும் படையொன்றை அனுப்பவே, சிங்களப் படைத் தலைவர் இருவரும் சேர்ந்து குலசேகர பாண்டியனைப் போரில் வென்று, தம் அரசன் ஆணையின்படி வீரபாண்டியனை மீண்டும் மதுரையில் அரியாசனத் தமர்த்தி முடி சூட்டு விழாவும் நிகழ்த்தினர்.

குலசேகர பாண்டியன் இவ்வாறு பன்முறையும் தோல்வி யெய்தியமையால் கி. பி. 1167-ஆம் ஆண்டில் சோழ நாட்டிற்கு வந்து, தன் நாட்டைத் தான் பெறுமாறு தனக்குப் படையனுப்பி உதவி புரிய வேண்டு மென்று கேட்டுக்கொண்டான். அவன் வேண்டுகோளுக்கிணங்கிய இராசாதிராச சோழன், திருச் சிற்றம்பலமுடையான் பெருமானம்பிப் பல்லவராயன் தலைமையில் ஒரு பெரும் படையைப் பாண்டி நாட்டிற்கு அனுப்பினான். சோணாட்டுப் படைக்கும் சிங்களப் படைக்கும்

தாண்டி பாசிப்பட்டணம் முதலான ஊர்களில் பெரும் போர்கள் நடைபெற்றன. அப்போர்களில் சிங்களப் படைத் தலைவர்கள் வெற்றி எய்தினர்.1 பகைஞர்களாகிய சிங்களவரின் வெற்றி, அந்நாட்களில் சோழ நாட்டு மக்களுக்குப் பேரச்சத் தையும் கலக்கத்தையும் உண்டுபண்ணியது என்று தெரிகிறது.

1. இதுவரையில் குறிக்கப்பெற்ற செய்திகள் இலங்கைச் சரிதமாகிய மகா வம்சத்தில் காணப்படுகின்றன. எஞ்சிய நிகழ்ச்சிகள் அதில் காணப்படவில்லை.

2.S.I.I., Vol. VI, No. 456. 'பின்பு மகராஜா ஸ்ரீராஜாதி ராஜதேவர் சாமந்தரோடே பூசல் பொரத் தொடங்கி தொண்டி பாசி பிரதேசத்திலே பூசலுண்டாய் அபாயத்திலே ஈழப்படை ஜயித்தவாறே சோழ மண்டலத்திலும் மற்றுள்ள நாடுகளிலுமுள்ள ஜனங்களெல்லாம் பயப்பட்டமையைக் கேட்டு எதிரிலி சோழச் சம்புவராயனேன் எனக்கு இது, எங்ஙனே யாமோ வென்று விசாரந் தோன்றி சுவாமிதேவர் ஸ்ரீபாதத்தேறச் சென்று இப்படிப் புகுந்தது ஈழப் படையாகிறது சாலப்பாபக் கர்மாக்கள் அவர்கள் சோழ மண்டலத் தெல்லையிலே புகுதில் ஸ்ரீ மகா தேவர் கோயிலுள்ளிட்ட தேவர்கள் கோயிலுக்கும் பிராமணர்க்கும் ராஷ்டிரத்துக்கு மடங்க விரோதமுண்டாம்.’

(ஆர்ப்பாக்கத்துக் கல்வெட்டு, வரிகள் 12-21)

2