உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:தி. வை. சதாசிவப் பண்டாரத்தார் ஆய்வுகள் 4.pdf/145

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




128

தி.வை.சதாசிவப் பண்டாரத்தார் ஆய்வுகள் - 4 னாகிய குலசேகர பாண்டியனுக்கும் பாண்டி நாட்டின் ஆட்சி யுரிமை பற்றி வழக்குண்டாயிற்று. குலசேகர பாண்டியன் மதுரை மாநகரை முற்றுகையிட்டான். பராக்கிரம பாண்டியன் சிங்கள வேந்தனாகிய பராக்கிரமபாகுவைத் தனக்கு உதவி புரியுமாறு வேண்டிக்கொண்டான். அவனும் பாண்டியன் வேண்டுகோளுக்கு உடன்பட்டு, இலங்காபுரித்தண்ட நாயகன் தலைமையில் பெரும் படையொன்றை அனுப்பினான். அப்படை பாண்டி நாட்டிற்கு வருவதற்குள், மதுரையை முற்றுகையிட்டிருந்த குலசேகர பாண்டியன், பராக்கிரம பாண்டியனையும், அவன் மனைவி மக்களையும் கொன்று அத் தலைநகரைக் கைப்பற்றி அங்கிருந்து பாண்டி நாட்டை ஆட்சிபுரியத் தொடங்கினான். அதனையறிந்த இலங்காபுரித் தண்ட நாயகன் பெருஞ் சினங்

காண்டு, பாண்டி நாட்டைப் பிடித்துக் கொலையுண்ட பராக்கிரமப் பாண்டியனைச் சேர்ந்தோர்க்கு அளிக்க எண்ணி, அந்நாட்டில் இராமேசுவரம் முதலான ஊர்களைக் கைப்பற்றினான். சிங்களப் படைக்கும் குலசேகர பாண்டியன் படைக்கும் பாண்டி நாட்டில் பல ஊர்களில் கடும் போர்கள் நடைபெற்றன. இறுதியில், இலங்கா புரித் தண்ட நாயகனே வெற்றி எய்தினான். அதனை யுணர்ந்த குலசேரகர பாண்டியன், கொங்கு நாட்டிலிருந்த தன் மாமன் படைகளையும் சிதறிக் கிடந்த பராக்கிரம பாண்டியன் படைகளையும் தன் படைகளையும் ஒருங்குசேர்த்துக் கொண்டு, தானே இலங்காபுரித் தண்ட நாயகனை எதிர்த்துப் போர் புரிவா னாயினன். அப்போரிலும் இலங்காபுரித் தண்ட நாயகன் வெற்றி பெற்று மதுரை மாநகரைக் கைப்பற்றி, கொலையுண்ட பராக்கிரம பாண்டியன் புதல்வனும் மலை நாட்டில் ஒளிந்து கொண்டிருந்தவனுமாகிய வீரபாண்டியனை அழைப்பித்துப் பாண்டி நாட்டை ஆட்சிபுரிந்து வருமாறு செய்தான்; அந் நாட்டில் கீழைமங்கலம் மேலைமங்கலம் முதலான ஊர் களடங்கிய பகுதியைக் கண்ட தேவ மழவராயன் ஆண்டு வருமாறு அளித்தனன்; தொண்டி, கருந்தங்குடி முதலான ஊர்களடங்கிய பகுதியை மழவச் சக்ரவர்த்தி ஆளும்படி வழங்கினான். இவ்வாறு பாண்டி நாட்டுத் தலைவர் சிலர்க்கு ஆட்சியுரிமை நல்கி, அன்னோரை இலங்காபுரித் தண்ட நாயகன் தன் வயப்படுத்தி வைத்திருந்த காலத்தில், குலசேகர பாண்டியன் படை திரட்டிக்