உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:தி. வை. சதாசிவப் பண்டாரத்தார் ஆய்வுகள் 4.pdf/144

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




பிற்காலச் சோழர் சரித்திரம் - 2

127

இனி, இராசாதிராச சோழன் ஆட்சிக் காலத்தில் பாண்டி நாட்டில் தாயத்தினரான இரு பாண்டி வேந்தர்களுக்குள் அரசாளும் உரிமைபற்றிப் பகைமை உண்டாயிற்று. அதனால், அவ் விருவரும் சில ஆண்டுகள் வரையில் தமக்குள் போர் புரிந்துகொண்டிருந்தனர். அவர்களுள், குலசேகர பாண்டியனுக்கு நம் இராசாதிராச சோழனும் பராக்கிரம பாண்டியனுக்கு சிங்கள மன்னனாகிய பராக்கிரம பாகுவும் படையனுப்பி உதவி புரிந்தனர். ஆகவே, அப்போர் பாண்டியர்களுக்குள் நிகழ்ந்த தெனினும், அஃது உண்மையில் சோழ மன்னனுக்கும் சிங்கள வேந்தனுக்கும் நடைபெற்றதென்றே கூறவேண்டும். ஆட்சி உரிமை பற்றி நிகழ்ந்த அப்பாண்டி நாட்டுப் போரின் முதற் பகுதி இலங்கைச் சரிதமாகிய மகாவம்சத்திலும்' எஞ்சிய பகுதிகள் சோழ நாட்டிலும் தொண்டை நாட்டிலுமுள்ள நான்கு கல்வெட்டுக்களிலும் குறிக்கப்பட்டுள்ளன. அக்கல்வெட்டுக் களுள் காஞ்சிமா நகரைச் சார்ந்த ஆர்ப்பாக்கத்துக் கல்வெட்டு

ராசாதிராசனது ஐந்தாம் ஆட்சியாண்டிலும், மாயூரத்தைச் சார்ந்த பல்லவராயன் பேட்டைக் கல்வெட்டு எட்டாம் ஆட்சி யாண்டிலும் அரக்கோணத்தைச் சார்ந்த வட திருவாலங் காட்டுக் கல்வெட்டும் திருக்கடவூர் மயானக் கல்வெட்டும்' பன்னிரண்டாம் ஆட்சி யாண்டிலும் வரையப் பெற்றன வாகும். ஒவ்வொரு கல்வெட்டிலும் அவ்வப் போது நிகழ்ந்த சில போர் நிகழ்ச்சிகளே காணப்படுகின்றன. அவற்றின் துணை கொண்டு அப்போர் நிகழ்ச்சிகளை ஆராய்வது அமைவுடைய தேயாம்.

6

பராக்கிரம பாண்டியன் மதுரையில் வீற்றிருந்து அர சாண்டு கொண்டிருக்குங்கால், அவனுக்கும் அவன் தாயத்தின 1. மகா வம்சத்தில் 76, 77 ஆம் அதிகாரங்களில் இப் போர் நிகழ்ச்சிகள் கூறப்பட்டுள்ளன.

2. S.I.I., Vol. VI, No. 456.

3 Ep. Ind., Vol. XXI, No. 31.

4. Ibid. Vol, XXII, No. 14.

5. Ins. 261 of 1925.

6.

வட திருவாலங்காட்டுக் கல்வெட்டும் திருக்கடவூர் மயானக் கல்வெட்டும் ஒன்றாகவே இருத்தல் அறியத்தக்கது ஆனால் பிந்தியது மிகச் சிதைந்த நிலையில் உளது; எனினும், முந்தியதில் சிதைந்துள்ளவற்றை அறிவதற்குப் பயன்படுகிறது.