உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:தி. வை. சதாசிவப் பண்டாரத்தார் ஆய்வுகள் 4.pdf/143

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




126

20. இரண்டாம் இராசாதிராச சோழன் (கி. பி. 1163 – 1178)

2

இரண்டாம் இராசராச சோழனால் கி. பி. 1163-ஆம் ஆண்டில் இளவரசுப் பட்டங் கட்டப் பெற்று, கி. பி. 1166-ஆம் ஆண்டில் சோழ இராச்சியத்திற்குச் சக்கரவர்த்தியாக முடி சூட்டப்பெற்ற வ்வரச குமாரன், விக்கிரம சோழனுடைய பேரன், நெறியுடைப் பெருமாளின் புதல்வன். இவனது பிள்ளைத் திருப்பெயர் எதிரிலிப் பெருமாள் என்பது. இவன் முடி சூட்டப்பெற்ற நாளில் இராசாதிராசன் என்னும் அபிடேகப் பெயர் எய்தினன். இவனுக்கு முன் அரசாண்ட இரண்டாம் ராசராசசோழன் பரகேசரி என்னும் பட்டமுடைய வனாயிருந்தமையால், அக் காலத்துச் சோழ மன்னர்களின் ஒழுகலாற்றின்படி இவன் இராசகேசரி என்ற பட்டத்துடன் ஆட்சி புரிவானாயினன். கல்வெட்டுக்களில் இவனுக்கு மூன்று மெய்க்கீர்த்திகள் காணப்படுகின்றன. அவற்றுள் ஒன்று ‘கடல் சூழ்ந்த பார் மாதரும்* எனவும், மற்றொன்று 'கடல் சூழ்ந்த பாரேழும் எனவும், பிறிதொன்று 'பூமருவிய திசை முகத்தோன்" எனவும் தொடங்குகின்றன. அம்மெய்க்கீர்த்திகள் வன் ஆட்சியின் சிறப்பை அழகுற கூறுகின்றனவேயன்றி வன் வரலாற்றுச் செய்திகளை உணர்த்துவனவாயில்லை. எனினும், இவன் கல்வெட்டுக்களுள் சில, இவன் ஆட்சிக் காலத்தில் நடைபெற்ற பாண்டி நாட்டுப் போர் நிகழ்ச்சிகளை நன்கு புலப்படுத்துகின்றன.

5

1. Ep. Ind., Vol. IX, p. 211.

2. Ibid. Vol. XXI, p. 190; Ibid, Vol. XXII, p. 86, Foot Note.

3. S.I.I., Vol. VII, No. 227.

4. Ins. 172 of 1908; Ins. 540 of 1904.

5.S.I.I., Vol. VII, No. 890.