உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:தி. வை. சதாசிவப் பண்டாரத்தார் ஆய்வுகள் 4.pdf/159

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




142

21. மூன்றாங் குலோத்துங்க சோழன் (கி.பி. 1178 – 1218)

.

இரண்டாம் இராசாதிராச சோழனுக்குப் பிறகு மூன்றாங் குலோத்துங்க சோழன் கி. பி. 1178-ஆம் ஆண்டில்' சோழ இராச்சியத்திற்குச் சக்கரவர்த்தியாக முடி சூட்டப்பெற்றான். இவன் இரண்டாம் இராசாதிராசன் தம்பி என்று சிலர் கூறுகின்றனர்.' அதற்குக் கல்வெட்டுக்களில் சான்றுக ளின்மையின் அஃது ஏற்றுக் கொள்ளத்தக்கதன்று.சங்கர சோழன் உலாவில் சொல்லப்படும் சங்கமன் மக்களான நல்லமன், குமார மகீதரன் ஆகிய இருவரும் முறையே இரண்டாம் இராசாதிராசனும் மூன்றாங் குலோத்துங்கனு மாயிருத்தல் வேண்டுமென்று கூறுவர் சிலர். அவ்வுலாவில் கூறப்பெற்ற சங்கமனும் அவன் மக்களாகிய நல்லமன், குமார மகீதரன், சங்கரன் என்போரும் கொங்கு நாட்டிலிருந்த கொங்குச் சோழராவர். சங்கமன் என்ற பெயர் அவன் வீர சைவனா யிருத்தல் வேண்டுமென்பதை வலியுறுத்துகின்றது. சங்கர சோழன் உலாவும் குலோத்துங்க சோழன் கோவையும் கொங்கு நாட்டிலிருந்து கிடைத்தவை. அவ் வேட்டுப் பிரதிகள் தஞ்சை யரண்மனைப் புத்தகசாலையிலும் சோழ நாட்டிலும் இல்லாமை குறிப்பிடத் தக்கது. எனவே, அவை சோழர்களின் வரலாற்றா ராய்ச்சிக்கு ஏற்றுக்கொள்ளத் தக்கவை யல்ல. இரண்டாம் இராசாதிராசன் எதிரிலிப் பெருமாள் எனவும் அவன் தந்தை நெறியுடை பெருமாள் எனவும் வழங்கப்பெற்றனர் என்பது பல்லவராயன் பேட்டைக் கல்வெட்டால் அறியப்படுகிறது. அப் பெயர்களுள் எதுவும் சங்கர சோழன் உலாவிலும் குலோத்துங்க சோழன் கோவையிலும் காணப்படவில்லை. அன்றியும் நெறியுடைப் பெருமாள் என்பான் விக்கிரம சோழன் பேரனென்று அக்கல்வெட்டு 1. Ep. Ind., Vol. VIII, p. 260.

2. Kulottunga Chola III, p. 31. 3. Ep. Ind., Vol. XXI, No. 31.

3