உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:தி. வை. சதாசிவப் பண்டாரத்தார் ஆய்வுகள் 4.pdf/158

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




பிற்காலச் சோழர் சரித்திரம் - 2

141

கோயிலுக்கு வன் இறையிலி நிலம் கொடுத்துள்ளனன் என்பது அங்குள்ள கல்வெட்டொன்றால் அறியப்படுகின்றது. இவன் ஓர் அரசியல் அதிகாரியாயிருந்திருத்தல் வேண்டு மென்பது திண்ணம்.

11. குணமலைப்பாடி யுடையான் ஆட்கொண்டான் கங்கை கொண்டானாகிய பொத்தப்பிச் சோழன்:

இவன் சோழ மண்டலத்தில் சுத்தமல்லி வளநாட்டில் வெண்ணிக் கூற்றத்திலிருந்த ஓர் அரசியல் அதிகாரியாவன். இவன், ஆந்திர தேயத்தில் நிகழ்த்திய வீரச் செயல் பற்றிப் பொத்தப்பிச் சோழன் என்னும் சிறப்புப் பெயர் பெற்றனன் போலும். இவன் திருவலஞ்சுழி யிறைவர்க்கு மூன்று திருவிளக்கிற்கு நிவந்தம் அளித்துள்ளமை அவ்வூர்க்கல்வெட்டொன்றால்' புலனா கின்றது.

12. நெல்லூர்ச் சித்தியரையன்:

இவன் இராசாதிராசன் ஆட்சிக்காலத்தில் நெல்லூரில் வாழ்ந்து கொண்டிருந்த ஒரு சிற்றரசன் என்பது திருக்காளத்தியி லுள்ள ஒரு கல்வெட்டால் புலப்படுகின்றது.

13. புசபல வீரன் ஆகோ மல்லராசன்:

இவன் கங்க நாட்டிலிருந்த ஒரு சிற்றரசன்; சோழமாராசன் என்னும் பட்டம் பெற்றவன்; மகா மண்டலாதிபதி என்று அக்காலத்தில் வழங்கப் பெற்றவன். இவன் காஞ்சி மாநகரில் ஒரு நந்தவனத்திற்கு நிலம் வாங்கும் பொருட்டுப் பொருள் வழங்கியுள்ளனன் என்பது காஞ்சிக் கல்வெட்டால்" உணரக் கிடக்கின்றது. ஆகவ மல்லராசன் என்பதே ஆகோ மல்லராசன் எனத் திரிந்தது போலும்.

1. Ins. 43 of 1916. 2.S.I.I.,Vol. VIII, No. 218.

3. Ins. 105 of 1922.

4. S.I.I., Vol. IV. No. 861.