உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:தி. வை. சதாசிவப் பண்டாரத்தார் ஆய்வுகள் 4.pdf/157

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




140

1

.வை. சதாசிவப் பண்டாரத்தார் ஆய்வுகள் -4 சேதிராயன், நீறணிந்தானாகிய சேதிராயன்' திருவரங்க முடையான் இராசாதிராச மலையரையன்,* ஆகார சூரமலைய மான்,4 என்போர். இவர்களுள் தென்னார்க்காடு ஜில்லாவிலுள்ள திருக்கோவலூர், கீழூர், சித்தலிங்க மடம் என்னும் ஊர்களிலுள்ள கோயில்களுக்கு நிவந்தமளித்துள்ள இராசராச கோவலராயன், இராச கம்பீரசேதிராயன், ஆகார சூர மலையமான் என்போர் மலையமான் மரபினராவர். எஞ்சிய மூவரும் அரசனால் வழங்கப் பெற்ற மலையரையன், சேதிராயன் என்ற பட்டம் பெற்றவர் களேயன்றி மலையமான் மரபின ரல்லர் என்பது சில குறிப்புக் களால் உய்த்துணரக் கிடக்கின்றது.

8. கடந்தை சேந்தன் ஆதித்தனான இராசராச சிங்கார முத்தரையன்: இவன் பெண்ணாகடத்தைச் சூழ்ந்த நிலப்பரப்பில் நாடு காவல் அதிகாரியாயிருந்தவன்; இவன், திட்டக்குடியிலுள்ள திருமால் கோயிலுக்கு ஐந்து வேலி நிலத்தை இறையிலியாக கி. பி. 1168-ல் அளித்துள்ளனன் என்பது இங்குள்ள ஒரு கல்வெட்டால்' அறியக் கிடக்கின்றது.

9. அரச நாராயணன் ஏழிசை மோகனாகிய சநநாத கச்சிராயன்:

இவன் பல்லவர் மரபில் பிறந்தவன்; திருமுனைப் பாடி நாட்டில் திருவதிகை திருநாவலூர் முதலான ஊர்களைச் சார்ந்த நிலப்பகுதியில் நாடு காவல் அதிகாரியாக விளங்கியவன். கி. பி. 1171-ல் இவன் திருவதிகை வீரட்டானேச்சுவரர்க்குத் திருவிளக்கிற்கு நிவந்தம் அளித்துள்ளான் என்று ஒரு கல்வெட்டு உணர்த்துகின்றது.6

10. திருக்கொடுக் குன்றமுடையான் நிஷதராசன்:

பாண்டி நாட்டில் பொன்னமராவதியிலிருந்த ஒரு தலைவன், இராமநாதபுரம் ஜில்லாவிலுள்ள திருக்களக்குடிக்

1. Ins. 311 of 1921; 322 of 1921.

2. Ins. 297 of 1912.

3. Ins. 150 of 1930.

4. Ins. 427 of 1909.

5. S.I.I., Vol. VIII, No. 298.

6. Ibid, No. 322.