உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:தி. வை. சதாசிவப் பண்டாரத்தார் ஆய்வுகள் 4.pdf/156

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




பிற்காலச் சோழர் சரித்திரம் - 2

139

னென்று அக்காலத்தில் வழங்கப் பெற்றிருத்தலால் இராசாதிராச சோழன் ஆட்சியில் பாண்டி நாட்டுப் போருக்குச் சென்றிருந்த சோணாட்டுப் படைத் தலைவர்களுள் இவனும் ஒருவனாதல் வேண்டும். இவன் நடுநாட்டுத் தலங்களுள் ஒன்றாகிய திருவக் கரையில் சூரியன் திருக்கோபுரம் என்னுங் கோபுரமொன்று எடுப்பித்தானென்பது அவ்வூர்க் கல்வெட்டொன்றால்' அறியப்படுகின்றது. அன்றியும், சிற்றாமூரிலுள்ள சமணர் கோயிலுக்கு இவன் பள்ளிச் சந்தமாக நிலம் அளித்துள்ளமை ஒரு கல்வெட்டால்’ புலனாகின்றது.

6. அம்மையப்பன் சீயன் பல்லவாண்டானான நாராயண சம்புவராயன்:

பல்லவர் குலத்தில் செங்கேணிக் குடியில் தோன்றிய இத்தலைவன், தென்னார்க்காடு ஜில்லாவிலுள்ள முந்நூர்க் கோயிலுக்குத் திருப்பணி புரிதற்பொருட்டு சில வரிகளை கி.

பி.

1174-ல் நிவந்தமாகக் கொடுத்துள்ளனன்.3 இவன் இரண்டாம் இராசராச சோழன் காலத்தும் இருந்தவனாவன் செங்கேணி அம்மையப்பன் பாண்டியான இராசராச சம்புவ ராய னென்பவனும் அந் நாட்களிலிருந்த ஒரு பல்லவர் குலத் தோன்றல் என்பது மேல் சேவூரிலுள்ள ஒரு கல்வெட்டால்" வெளியாகின்றது.

7. மலையமானாட்டுச் சிற்றரசர்கள்:

இவர்கள் திருக்கோவலூர், கிளியூர், ஆடையூர் ஆகிய ஊர்களிலிருந்து மலைய மானாட்டை ஆண்டு வந்தவர்கள்; இவர்களுள், இராசாதிராசன் காலத்திலிருந்தவர்கள், இராசராச மலையரையன் ஆகிய அருளாளப் பெருமாள்,5 ராசராச சேதிராயன்,® ராசராச கோவலராயன்,' கிளியூர் இராசகம்பீர

1. Ins. 195 of 1904.

2.S.I.I.,Vol, VII, No. 829.

3. Ins. 71 of 1919.

4. Ins. 222 of 1904.

5. S.I.I., Vol. VII, No. 547.

6. Ibid., No. 890.

7. Ibid.