உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:தி. வை. சதாசிவப் பண்டாரத்தார் ஆய்வுகள் 4.pdf/155

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




138

தி.வை.சதாசிவப் பண்டாரத்தார் ஆய்வுகள் - 4

3. வேதவனமுடையான் கருணாகர தேவனான அமரகோன்:

இவன் மேலே குறிப்பிட்ட அண்ணன் பல்லவரா யனுக்குத் தமையன் அல்லது தம்பியாதல் வேண்டும். இவன் திருவலஞ் சுழியிலுள்ள கோயிலுக்கு' இரண்டு நுந்தாவிளக்கும் பழை யாறை நகரிலுள்ள திருச்சத்தி முற்றக் கோயிலுக்கு ஐந்து நுந்தா விளக்கும் வைத்து அவற்றிற்கு நிவந்தம் வழங்கியுள்ளான். இவன் அரசாங்கத்தில் ஓர் உயர்ந்த நிலையிலிருந்தவனாதல் வேண்டும். 4. செங்கேணி அம்மையப்பன் எதிரிலி சோழ சம்புவராயன்:

இவன் பல்லவர் மரபில் செங்கேணிக் குடியில் தோன்றியவன்; செங்கற்பட்டு, வடார்க்காடு ஜில்லாக்களடங்கிய நிலப்பரப்பில் நாடு காவல் அதிகாரியாய் நிலவியவன்; இவன் வேண்டிக் கொண்டவாறு சிங்களப் படை தோல்வி யெய்திப் பாண்டி நாட்டை விட்டோடும்படி இருபத்தெட்டு நாட்கள் இரவும் பகலுந் தவங்கிடந்த உமாபதி தேவராகிய ஞானசிவ தேவர்க்கு 167 வேலியுள்ள ஆர்ப்பார்க்கம் என்ற ஊரை ஏகபோக இறையிலியாக இவன் கி. பி. 1168-ல் வழங்கினன் என்று அவ்வூர்க் கல்வெட்டொன்று கூறுகின்றது. சில வரிகளாற் கிடைக்கும் பொருளைச் செங்கற்பட்டு ஜில்லாவிலுள்ள திருப்புலிவனத் திறைவர்க்கு வழிபாட்டிற்கும் கோயில் திருப்பணிக்கும் கி. பி. 1167-ல் இவன் நிவந்தமாக அளித்தனன் என்று அங்குள்ள ஒரு கல்வெட்டு உணர்த்துகின்றது.± எனவே, அரசாங்கத்தில் மிக்க அதிகாரம் வாய்ந்தவனாக இவன் இருந்திருத்தல் வேண்டு மென்பது திண்ணம்.

3

5. அம்மையப்பன் பாண்டி நாடு கொண்டானான கண்டர் சூரியன் சம்புவராயன்:

இவன் பல்லவர் மரபினன்; செங்கேணிக் குடியினன்; தன்னார்க்காடு ஜில்லாவின் ஒரு பகுதியில் நாடு காவல் அதிகாரியாய் விளங்கியவன்; இவன் பாண்டி நாடு கொண்டா

1. S.I.I.,Vol. VIII, No. 216.

2. Ins. 270 of 1927.

3.S.I.I.,Vol. VI, No. 456.

4. Ins. 393 of 1923.