உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:தி. வை. சதாசிவப் பண்டாரத்தார் ஆய்வுகள் 4.pdf/154

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




பிற்காலச் சோழர் சரித்திரம் - 2

137

உதவி புரிந்து வந்தவன்; இம் மன்னன் ஆணையின்படி பாண்டி நாட்டிற்குப் படையெடுத்துச் சென்று, சிங்களப் படையை வென்று குலசேகர பாண்டியனுக்கு மதுரை மாநகரில் அரசு வழங்கியவன்; இவன் கி.பி. 1171-ல் இறந்தபோது இவன் மனைவியர்க்கும் மக்களுக்கும் இராசாதிராசன் குளத்தூரில் நாற்பது வேலி நிலம் இராசாதிராச சோழனால் அளிக்கப்பெற்ற செய்தி, பல்லவராயன் பேட்டையிலுள்ள ஒரு கல்வெட்டால்' அறியக் கிடக்கின்றது. இவன் வரலாற்றுள் பிறவற்றை முன் அதிகாரத்தில் காணலாம்.

2. வேதவனமுடையான் அம்மையப்பன் அண்ணன் பல்லவராயன்: இவன் தொண்டை மண்டலத்தில் பழையனூர் திருவாலங்காட்டிற் பிறந்தவன்; திருச்சிற்றம்பலமுடையான் பெருமானம்பிப் பல்லவராயன் இறந்தபின்னர், இராசாதிராச சோழன் பால் அமைச்சர் தலைவனாக நிலவிய பெருமை யுடையவன். இவ்வரசன் ஆணையின்படி பாண்டி நாட்டின் மேற் படையெடுத்துச்சென்று, நன்றி மறந்த குலசேகர பாண்டியனை அரியணையினின்றும் நீக்கி, அதனை வீரபாண்டியனுக்கு வழங்கிய பெருவீரன்; சிங்கள வேந்தனாகிய பராக்கிரம பாகுவின் எண்ணம் நிறைவேறாதவாறு சீவல்லபனுக்குத் துணைப்படையளித்து அவ்வேந்தனைப் போரில் வெல்லும்படி செய்த சூழ்ச்சித் திறம் வாய்ந்தவன். எனவே, இவன் சிங்களவர் படையெழுச்சியி லிருந்து சோழ நாட்டைக் காப்பாற்றியவன் என்பது உணரத் தக்கது. இவன் சோழ இராச்சியத்திற்குப் புரிந்த பெருந் தொண்டுகள் பற்றி இவனுக்கு அருமொழித்தேவ வளநாட்டு நென்மலி நாட்டு

4

ராசராசன் பழையனூரில் பத்து வேலி நிலம் இராசாதிராச சோழனால் அளிக்கப்பெற்றது.' இவன் திருவாரூரிலும் வட திருவாலங் காட்டிலும் உள்ள கோயில்களுக்கு முறையே இறையிலி நிலமும் மூன்று திருவிளக்குகட்கு நிவந்தமும் கொடுத்தி ருத்தலால் இவன் சிவபத்தி வாய்ந்தவன் என்று தெரிகிறது.

1. Ep. Ind., Vol. XXI, No. 31.

2. Ibid, Vol. XXII, No. 14.

3. Ins. 538 of 1904.

4. Ins. 474 of 1905.