உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:தி. வை. சதாசிவப் பண்டாரத்தார் ஆய்வுகள் 4.pdf/173

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




156

தி.வை.சதாசிவப் பண்டாரத்தார் ஆய்வுகள் - 4

பெருமானடிகளுக்குப் பல்வகை அணிகலன்கள் அளித்தும் தன் பெயரால் திருவிழாக் கண்டும் திருவீதி அமைத்தும் அப் பெருமான் திருக்கோயிலைப் பொன் வேய்ந்தும் ஆற்றிய அருந்தொண்டுகள் பலவாம்.

இனி, திருவாரூரிலுள்ள இவனது இருபத்து நான்காம் ஆட்சி யாண்டுக் கல்வெட்டில்' இவன் மதுரையில் புனைந்து கொண்ட திரிபுவன வீரதேவன் என்ற பட்டம் காணப்படுதலால், கி. பி. 1202-ஆம் ஆண்டிற்கு முன்னரே இவன் பாண்டியருடன் நிகழ்த்திய மூன்றாம் போர் நடைபெற்றிருத்தல் வேண்டு மென்பது திண்ணம். இவனது ஆட்சியின் 18,21,39-ஆம் ஆண்டுக் கல்வெட்டுக்கள்' பாண்டி நாட்டிலிருத்தலால் அந்நாடு இவன் ஆட்சிக் காலம் முழுவதும் இவனுக்கு உட்பட்டிருந்தது என்று தெரிகிறது. தான் வென்று கைப்பற்றிய பாண்டி நாட்டைச் சில ஆண்டுகட்குப் பிறகு தன்பால் அடைக்கலம் புகுந்த சடைய வர்மன் குலசேகரனுக்கே இவன் வழங்கியமை உணரற்பாலது. மூன்றாம் முறை நிகழ்ந்த பாண்டி நாட்டுப் போர் இங்ஙனம் முடிவெய்தியது எனலாம்.

குலோத்துங்கன் காலத்தில் சோழ ராச்சியத்தின் பரப்பு

இவ் வேந்தர் பெருமான் கல்வெட்டுக்கள், தென் பாண்டி நாட்டில் திருநெல்வேலியிலும், மதுரை ஜில்லாவிலுள்ள தேனூரிலும் புதுக்கோட்டை நாட்டில் சில ஊர்களிலும்; சேலம் ஜில்லாவில் தடாவூர், தகடூர், ஆறகளூர் முதலான ஊர்களிலும் கொங்கு நாட்டுக் கருவூரிலும் மைசூர் நாட்டில்

1. அறந்தரு திருவாலவாயில் அமர்ந்தவர்க்குத் தன் பேரால்

சிறந்தபெருந் திருவீதியுந் திருநாளுங் கண்டருளிப்

பொருப்புநெடுஞ் சிலையால்முப் புரமெரித்த சொக்கர்க்குத்

திருப்பவனி கண்டருளித் திருவீதியில் சேவித்துத்

தென்மதுரைத் திருவாலவாய் பொன்மலையெனப்

2. Ins.554 of 1904.

பொன்வேய்ந்து (Ibid. No. 166)

3. Ins. 28 of 1927 Ins. 311 of 1928 Ins. 606 of 1926.

4. Inscriptions of the Pudukkottai State Nos. 152, 158, 161, 170 and 176.

5. Ins. 461 of 1913; Ins. 458 of 1913; 435 of 1913.

6. S.I.I., Vol. III, Nos. 23 and 24 Ins. 141 of 1905.