உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:தி. வை. சதாசிவப் பண்டாரத்தார் ஆய்வுகள் 4.pdf/172

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




பிற்காலச் சோழர் சரித்திரம் - 2

155

குலோத்துங்கன் அவர்கள்பால் பெருஞ் சினங் கொள்வது யல்பேயாம். எனவே, இவன் பேராற்றல் படைத்த பெரும் படைகளைத் திரட்டிக்கொண்டு பாண்டி நாட்டின்மேல் படையெடுத்துச் சென்றான். அதனையறிந்த குலசேகர பாண்டியன், தன் மறப் படையும் ஏழகப் படையுந் திரட்டிக்கொண்டு குலோத் துங்கனோடு போர் புரியப் புறப்பட்டான். மட்டியூர் கழிக் கோட்டை என்ற ஊர்களில் பெரும் போர்கள் நடைபெற்றன. பாண்டியப் படைகள் பேரழிவிற்குள்ளாகித் தம் ஆற்றல் இழந்து புறங் காட்டி யோடிவிடவே, குலசேகர பாண்டியன் தோல்வி எய்தித் தன் தம்பியோடு மதுரை மாநகரை விட்டு ஓடிவிட்டான். குலோத்துங்கன் தன் படையுடன் அந்நகருள் புகுந்து, அரண்மனையில் சில மண்டபங்களைத் தகர்ந்தெறிந்தும் சில இடங்களை இருந்தவிடந் தெரியாமல் அழித்தும் தன் பெருஞ் சினத்தை ஒருவாறு ஆற்றிக் கொண்டான். பின்னர், இவன் தான் எய்திய பெருவெற்றி காரணமாக அந் நகரில் சோழ பாண்டியன் என்னும் பட்டம் புனைந்து வீர மாமுடி சூடிக்கொண்டான்; இங்ஙனம் செய்ததோடு அமையாமல், பாண்டி மண்டலத் திற்குச் சோழ பாண்டியன் மண்டலம் எனவும் மதுரை மாநகர்க்கு முடித்தலை கொண்ட சோழபுரம் எனவும் கொலு மண்டபத்துக்குச் சேர பாண்டியன் தம்பிரான் எனவும் இவன் பெயர்கள் வழங்கியுள்ளமை குறிப்பிடத்தக்கதாகும். 2

நம் குலோத்துங்கன் சேர நாடு பாண்டி நாடு ஆகிய இரண்டையும் வென்று தன்னடிப்படுத்தி, சோணாட்டுள்ளிட்ட முப்பெருந் தமிழ்நாடுகளிலும் ஒப்பற்ற வீரனாகத் திகழ்ந்தமை பற்றித் திரிபுவன வீர தேவன் என்னுஞ் சிறப்புப் பெயர் எய்துவா னாயினன். இவ் வேந்தன் மதுரை மாநகரில் தங்கியிருந்த காலத்தில் அவ்வரிய பெயருடன் விசயாபிஷேகமும் வீரா பிஷேகமும் செய்துகொண்டான் என்பது இவன் கல்வெட்டுக் களால் நன்கறியப்படுகின்றது. அந் நாட்களில், இவன் ஆலவாய்ப்

1. மட்டியூர் என்பது இராமநாதபுரம் ஜில்லா திருப்பத்தூர்த் தாலூகாவில் சதுர்வேதிமங்கலம் என்னும் பெயருடன் இக்காலத்தில் உளது. (Ins. 298 of 1927-28)

2. Inscriptions of the Pudukkottai State, No. 166.

3. Inscriptions of the Pudukkottai State, Nos. 169, 176 and 178.