உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:தி. வை. சதாசிவப் பண்டாரத்தார் ஆய்வுகள் 4.pdf/171

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




154

தி.வை.சதாசிவப் பண்டாரத்தார் ஆய்வுகள் -4

1

இப்போது எவ்விடத்தில் உளது என்பது தெரியவில்லை. வரலாற்றராய்ச்சியாளர் சிலர், காகதீய வேந்தர்களின் தலைநகர மாகிய ஓரங்கல் என்ற ஊரே உறங்கை எனக் கல்வெட்டில் குறிக்கப்பெற்றுள்ளது என்று கூறுகின்றனர். அதனை ஒரு தலையாகத் துணிந்துரைத்தற்குத் தக்க சான்றில்லை. ஆகவே, குலோத்துங்கனது வடநாட்டுப் போர் நிகழ்ச்சிகளைத் தெளிவாக விளக்கக்கூடிய ஆதாரங்கள் கிடைத்தாலன்றி இத்தகைய ஐயங்கள் நீங்கமாட்டா என்பது திண்ணம்.

பாண்டியனோடு நிகழ்த்திய மூன்றாம் போர்

2

நம் குலோத்துங்கனது பேருதவியினால் பாண்டி நாட்டில் பட்டம் பெற்ற விக்கிரம பாண்டியன் இறந்தபின்னர் அவன் புதல்வன் சடையவர்மன் குலசேகர பாண்டியன் என்பான் கி.பி. 1190-ல் மதுரையம்பதியில் அரியணை ஏறினான். அவன் தன் ஆட்சியின் தொடக்கத்தில் சில ஆண்டுகள் வரையில் குலோத்துங்கனுக்குட்பட்டிருந்தான்; இராசாதிராச சோழன் ஆட்சியில் இரு முறையும் இவன் ஆட்சியில் இரு முறையும் பாண்டி நாட்டில் நடைபெற்ற போர்களில் சோணாட்டுப் படைத் தலைவர்கள் தம் படைகளோடு சென்று போர் புரிய நேர்ந்தமை முன்னர் விளக்கப்பட்டுள்ளது. அந் நிகழ்ச்சிகள் எத்துணையோ பொருளழிவையும் இன்னல்களையும் சோழ இராச்சியத்திற்கு உண்டுபண்ணிவிட்டன என்பதில் ஐயமில்லை. எனினும், நம் குலோத்துங்கன் பாண்டி நாட்டில் அமைதியும் ஒழுங்கும் நின்று நிலவுமாறு தக்க ஏற்பாடு செய்தமை அறியற் பாலதாம். தன் நாடு அத்தகைய நிலையில் இருக்குங்கால், குலசேகர பாண்டியன் நன்றி மறந்து குலோத்துங்கனுக்குப் பகைவனாகிச் சில அடாச் செயல்கள் புரியத் தொடங்கவே, இவன் அந்நாட்டின்மேல் மறுபடியும் படையெடுத்துச் செல்வது இன்றியமையாததாயிற்று. சோழ மன்னர்களின் பேருதவியினால் தம் நாடும் அரசும் பெற்ற பாண்டியர்கள் இவ்வாறு அடிக்கடி முரண்பட்டுச் சோழர்களின் பகைவர்களோடு சேர்ந்துகொண்டு சோணாட்டிற்குத்

தீங்கிழைக்க

முயல்வதைக்

1. The Colas, Vol. II, p. 142; Kulottunga III, p. 35.

2. பாண்டியர் வரலாறு, பக். 46.

கண்ட