உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:தி. வை. சதாசிவப் பண்டாரத்தார் ஆய்வுகள் 4.pdf/170

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




பிற்காலச் சோழர் சரித்திரம் - 2

153

அவ்வாண்டில் தெலுங்குச் சோடர்கள் நம் குலோத்துங்கனுக்குக் கீழ்ப்படிந்து சிற்றரசராக வாழ்ந்து கொண்டிருந்தனர் என்பதை வலியுறுத்துதல் உணரற்பாலதாம்.

இனி, குடுமியான் மலையிற் காணப்படும் இவனது முப்பத்துநான்காம் ஆட்சி யாண்டுக் கல்வெட்டொன்று' இவன் வடபுல மன்னரை வென்று, வேங்கி மண்டலத்தைக் கைப்பற்றி உறங்கை என்னும் பொன்னகர் புகுந்தனன் என்று கூறுகின்றது. இச் செய்திகளை விளக்கக்கூடிய வேறு ஆதாரங்கள் கிடைக் காமையின் இவற்றை ஆராய்ந்து முடிவு காண இயலவில்லை. அன்றியும், இப்போர் நிகழ்ச்சியில் சில ஐயப்பாடுகளும் ம் தோன்றுகின்றன. நெல்லூர் ஜில்லாவுக்கு வடக்கே குலோத்துங்கன் கல்வெட்டுக்கள் காணப்படவில்லை. எனவே, வேங்கி நாடு இவன் ஆட்சிக்குட்பட்டிருந்தது என்று கருதுவதற்குச் சிறிதும் இடமில்லை. இந்நிலையில் இவன் வேங்கியைக் கைப் பற்றினான் என்று இவன் கல்வெட்டு உணர்த்துவது குறிப்பிடத் தக்கது. கி.பி.1199-ல் பட்டம் பெற்ற ஓரங்கல் மன்னனாகிய காகதீய கணபதி என்பான் வடபுலத்தில் பெருவலி படைத்த வேந்தனாய் நிலவியமையோடு அப் பகுதியிலிருந்த வேங்கி, பொத்தப்பி முதலான நாடுகள் எல்லாவற்றையும் தன்னடிப் படுத்தித் தன் ஆட்சியை யாண்டும் பரப்ப முயன்றனன் என்றும் தெரிகிறது. வட புலத்தில் பேரரசு ஒன்று நிறுவக் காலங் கருதிக் கொண்டிருந்த அக் காகதீய மன்னன் கி. பி. பதின்மூன்றாம் நூற்றாண்டின் தொடக்கத்தில் சோழ இராச்சியத்தின் வட பகுதியின்மேல் படையெடுத்து வந்திருக்கலாம். அந்நாட்களில் நம் குலோத்துங்கன் அவனைப் போரிற் புறங்கண்டு வடக்கே ஓடுமாறு துரத்தியு மிருக்கலாம். இந் நிகழ்ச்சிகளையே இவனது குடுமியான் மலைக் கல்வெட்டுக் குறிப்பாக உணர்த்துகின்றது எனலாம். அக்கல்வெட்டுக் கூறும் உறங்கை என்னும் நகர்

3

1. Inscriptions of the Pudukkottai State, No. 166. 2. The Colas, Vol. II, page. 141.

3. குலோத்துங்கனது 31-ஆம் ஆட்சியாண்டுக் கல்வெட்டிலும் இச்செய்திகள் வரையப் பெற்றுள்ளன. ஆனால், சில எழுத்துக்கள் உதிர்ந்து போய்விட்டன. எனினும், இப்போர் கி. பி. 1209க்கு முன்னர் நடைபெற்றிருத்தல் வேண்டுமென்பதை இக்கல்வெட்டு உணர்த்துவதாகும்.