உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:தி. வை. சதாசிவப் பண்டாரத்தார் ஆய்வுகள் 4.pdf/169

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




152

தி.வை.சதாசிவப் பண்டாரத்தார் ஆய்வுகள் - 4 போரில் வென்று அவன் பாலிருந்த காஞ்சியைக் கைப்பற்றி, அம் மாநகருள் வெற்றி முரசொலிப்பப் புகுந்திருத்தல் வேண்டு மென்பது தெள்ளிதிற் புலனாதல் காண்க. ஆகவே, இந்நிகழ்ச்சி குலோத்துங்கன் ஆட்சியில் இவனது தொண்டை நாட்டு நகர மாகிய காஞ்சி சில திங்களாதல் பிற வேந்தன் ஆட்சிக்குட் பட்டிருத்தல் வேண்டுமென்பதை உணர்த்துதல் அறியத் தக்கது.

1

னி, வடபுலத்திலிருந்த ஆந்திர மன்னர்கள் சோழர்க்குட் பட்ட குறுநில மன்னரா யிருந்து வந்தனராயினும், அவர்கள் வாய்ப்பு நேருங்கால் தாம் சுயேச்சையாகத் தனியரசு புரியும் கருத்தினராகவே இருந்து வந்தனர் என்பது சிற்சில நிகழ்ச்சி களால் புலப்படுகின்றது. கி. பி. 1192-ல் கடப்பை ஜில்லாவில் மகாராஜபாடி நாட்டை வல்லூரபுரத்திலிருந்து ஆண்டு கொண்டிருந்த புஜபல வீர நல்லசித்தனதேவ சோழ மகாராசன் என்னும் தெலுங்குச் சோடன் காஞ்சியிலிருந்து தான் கப்பம் வாங்கி வந்ததாகப் பெருமையுடன் கூறுவது குறிப்பிடத் தக்கதாகும். எனவே, நம் குலோத்துங்கன் பாண்டி நாட்டுப் போரில் ஈடுபட்டிருந்த காலத்தில் கி. பி. 1192-ல் அத்தெலுங்குச் சோழன் சுயேச்சை எய்திச் சில ஆண்டுகள் வரையில் சோழச் சக்கரவர்த்திக்குத் திறை செலுத்தாமல் இருந்திருக்கக்கூடும். அன்றியும், அந்நாளில் அவனே காஞ்சியையும் கைப்பற்றி யிருக்கலாம். பேராற்றல் படைத்த பெரு வீரனாகிய குலோத் துங்கன் இச் செயல்களை எங்ஙனம் பொறுக்க முடியும்? ஆகவே, இவன் ஆந்திர நாட்டின்மேல் படையெடுத்துச் சென்று அந் நல்லசித்தனதேவனை வென்று குறுநில மன்னனாக்கி, அவன்பாற் கப்பமும் பெற்றுக்கொண்டு காஞ்சியைக் கைப்பற்றி அதனுள் வாகை மாலையுடன் புகுந்திருத்தல் வேண்டும். இ நிகழ்ச்சியைத்தான் இவனது 19-ம் ஆட்சி யாண்டுக் கல்வெட்டு கூறுகின்றது." எனவே, இப்போர் கி. பி. 1194 -க்கும் 1197-க்கும் இடையில் நிகழ்ந்ததாதல் வேண்டும். நெல்லூர் ஜில்லா நெல்லூரில் கி. பி. 1197-ல் வரையப்பெற்றுள்ள கல்வெட்டொன்று

.

1. Ins.483 of 1906.

2.

‘வடமன்னரைத் தறைப்படுத்து முனிவாறிக் கச்சிபுக்கு முழு தரசையுந் திறைகவர்ந்து’ (S.I.I., Vol. III. No. 88.)

3.S.I.I.,Vol. V. No. 496.

3